Tuesday, 25 May 2021

நரஸிம்ஹ ஜெயந்தி - Narasimha Jeyanti (25-5-2021)

நரஸிம்ஹ ஜெயந்தி - Narasimha Jeyanti (25-5-2021)

संसारदावदहनाकरभीकरोरु ज्वालावलीभिरतिदग्धतनूरुहस्य । 
त्वत्पादपद्मसरसीं शरणागतस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥ 

ஸம்ʼஸாரதா³வத³ஹனாகரபீ⁴கரோரு ஜ்வாலாவலீபி⁴ரதித³க்³த⁴தனூருஹஸ்ய ।
த்வத்பாத³பத்³மஸரஸீம்ʼ ஶரணாக³தஸ்ய லக்ஷ்மீந்ருʼஸிம்ʼஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥


संसार-दाव-दहन-आकर-भीकर-उरु-ज्वाला-आवलीभिः - ஸம்ʼஸார-தா³வ-த³ஹன-ஆகர-பீ⁴கர-உரு-ஜ்வாலா-ஆவலீபி⁴꞉ - ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயின் ஏராளமான பயங்கரமான பெரிதான ஜ்வாலைகளின் தொடர்ச்சிகளால், 

अतिदग्ध-तनूरुहस्य - அதித³க்³த⁴-தனூருஹஸ்ய - நன்கு எரிக்கப்பட்ட ரோமங்களோடு கூடியவனும், 

त्वत्-पाद-पद्म-सरसीं - த்வத்-பாத³-பத்³ம-ஸரஸீம்ʼ - தங்களுடைய பாதங்களாகிய தாமரைக்குளத்தை

शरणागतस्य - ஶரணாக³தஸ்ய - சரணமாக அடைந்திருக்கிறவனுமான, 

मम - மம - எனக்கு,

करावलम्बं देहि - கராவலம்ப³ம்ʼ தே³ஹி - கைபிடிப்பை தாரும்,

लक्ष्मीनृसिंह - லக்ஷ்மீந்ருʼஸிம்ʼஹ - ஹே ! லக்ஷ்மீ ஸமேதரான நரஸிம்ஹரே !


பொருள் :

ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயின் ஏராளமான பயங்கரமான பெரிதான ஜ்வாலைகளின் தொடர்ச்சிகளால், நன்கு எரிக்கப்பட்ட ரோமங்களோடு கூடியவனும், தங்களுடைய பாதங்களாகிய தாமரைக்குளத்தை சரணமாக அடைந்திருக்கிறவனுமான எனக்கு (தங்கள்) கைபிடிப்பை தாரும், ஹே லக்ஷ்மி ஸமேதரான நரஸிம்ஹரே !


தினம் தினம் வாழ்வில் ஏற்படும் அநேக விதமான கஷ்டங்களால் தவித்துக் கொண்டிருக்கும் ஒருவன், இந்நிலையில் உதவ உற்றார் உறவினராலும் இயலாதபோது, அரசாங்கமோ, நண்பர்களோ, மருத்துவர்களோ என்று யாராலும் உதவமுடியாத நிலையில், அதுவும் இந்நிலை தொடர்கதையாகவே இருக்கும் எனும் நிலையில், ஒரே அடைக்கலம் என்று தன் பகவான் திருவடிகளை நினைத்து உருகி, ஆதரவை பகவானிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. சாதாரண மனிதனுக்கு ஏற்படக்கூடிய இத்தகைய நிலையை எண்ணி சங்கராசார்யர் அவனுக்காக இதை அமைக்கிறார்.

No comments:

Post a Comment