॥ श्री लक्ष्मी ध्यानम् ॥
॥ ஶ்ரீ லக்ஷ்மீ த்⁴யானம் ॥
वन्दे पद्मकरां प्रसन्नवदनां सौभाग्यदां भाग्यदां
हस्ताभ्यामभयप्रदां मणिगणैर्नानाविधैर्भूषिताम् ।
भक्ताभीष्टफलप्रदां हरिहरब्रह्मादिभिः सेवितां
पार्श्वे पङ्कजशङ्खपद्मनिधिभिर्युक्तां सदा शक्तिभिः ॥
வந்தே³ பத்³மகராம்ʼ ப்ரஸன்னவத³னாம்ʼ ஸௌபா⁴க்³யதா³ம்ʼ பா⁴க்³யதா³ம்ʼ
ஹஸ்தாப்⁴யாமப⁴யப்ரதா³ம்ʼ மணிக³ணைர்னானாவிதை⁴ர்பூ⁴ஷிதாம் ।
ப⁴க்தாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம்ʼ ஹரிஹரப்³ரஹ்மாதி³பி⁴꞉ ஸேவிதாம்ʼ
பார்ஶ்வே பங்கஜஶங்க²பத்³மநிதி⁴பி⁴ர்யுக்தாம்ʼ ஸதா³ ஶக்திபி⁴꞉ ॥
पद्मकरां - பத்³மகராம்ʼ - தாமரை போன்ற கைகளை உடையவளை அல்லது தாமரையைக் கைகளில் ஏந்தியவளை,
प्रसन्नवदनां - ப்ரஸன்னவத³னாம்ʼ - புன்முறுவல் பூத்த முகத்தினளை,
नानाविधैः मणिगणैः भूषितां - நானாவிதை⁴꞉ மணிக³ணை꞉ பூ⁴ஷிதாம்ʼ - பலவகையான மணிகளையும் ரத்தினங்களையும் அணிந்தவளை,
हरि हर-ब्रह्मादिभिः सेवितां - ஹரி ஹர-ப்³ரஹ்மாதி³பி⁴꞉ ஸேவிதாம்ʼ - ஹரி , ஹரன் , பிரம்மா முதலியோரால் ஸேவிக்கப்படுபவளை,
सौभाग्यदां - ஸௌபா⁴க்³யதா³ம்ʼ - சிறந்த பாக்கியத்தைத் தருபவளை (பெருமாளையே அடைவித்தல்),
पार्श्वे पङ्कज-शङ्ख-पद्म-निधिभिः युक्तां - பார்ஶ்வே பங்கஜ-ஶங்க²-பத்³ம-நிதி⁴பி⁴꞉ யுக்தாம்ʼ - பக்கத்தில் தாமரை, சங்க நிதி, பத்ம நிதி முதலியவைகளை எப்போதும் கொண்டிருப்பவளை,
भाग्यदां - பா⁴க்³யதா³ம்ʼ - பாக்கியங்களைத் தருபவளை (வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்தல்),
सदा शक्तिभिः (युक्तां) - ஸதா³ ஶக்திபி⁴꞉ (யுக்தாம்ʼ) - எப்போதும் சக்தியுடன் இருப்பவளை,
भक्त-अभीष्ट-फलप्रदां - ப⁴க்த-அபீ⁴ஷ்ட-ப²லப்ரதா³ம்ʼ - பக்தர்களது இச்சைகளை விரும்பிய பலன்களைத் தருபவளை,
हस्ताभ्याम् अभय-प्रदां - ஹஸ்தாப்⁴யாம் அப⁴ய-ப்ரதா³ம்ʼ - தன் இரு கைகளாலும் அபயம் அளிப்பவளை,
( तां लक्ष्मीं ) - ( தாம்ʼ லக்ஷ்மீம்ʼ ) - ( அந்த லக்ஷ்மி தேவியை )
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
தாமரை போன்ற கைகளை உடையவளும் அல்லது தாமரையைக் கைகளில் ஏந்தியவளும், புன்முறுவல் பூத்த முகத்தினளும், பலவகையான மணிகளையும் ரத்தினங்களையும் அணிந்தவளும்; ஹரி , ஹரன் , பிரம்மா முதலியோரால் ஸேவிக்கப்படுபவளும், சிறந்த பாக்கியத்தைத் தருபவளும் (பெருமாளையே அடைவித்தல்), பக்கத்தில் தாமரை, சங்க நிதி, பத்ம நிதி முதலியவைகளை எப்போதும் கொண்டிருப்பவளும், பாக்கியங்களைத் தருபவளும் (வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்தல்), எப்போதும் சக்தியுடன் இருப்பவளும்,
பக்தர்கள் தாம் விரும்பிய பலன்களைத் தருபவளுமான
அந்த லக்ஷ்மி தேவியை
வணங்குகிறேன்.
# 'தாமரை போன்ற' அதாவது மென்மையான, குளிர்ந்த, விசாலமான, நறுமணமுடைய என்று கொள்ளலாம்.
# நீலம், கோமேதகம், வைரம், வைடூரியம் முதலான பல மணிகளையும், ரத்தினங்களையும் அணிந்திருக்கிறாள். பார்ப்பவர்கள் மனம் குளிர.
# இவை போக முக்கியமாக அணிந்திருக்கும் ஆபரணம், புன்னகையே. நம் குற்றங்களை நோக்காமல், தன் இயல்பான புன்முறுவலையே உதிர்க்கிறாள். அவளும் பிரசன்னமாக இருக்கிறாள், வரும் பக்தர்களையும் பிரசன்னம் ஆக்குகிறாள்.
# சிவபெருமான், பிரம்மா, இந்திராதி தேவர்கள் என அனைவராலும் துதிக்கப்படுபவள். இங்கு லட்சுமிக்கு பதியான ஹரியும் ஸேவிக்கிறார். ஆனால் சிவபெருமான் முதலானோர் ஸேவிப்பது, ஜகன்மாதா, தேவதேவி என்கிறபடியாக. பெருமாள் ஸேவிப்பது தன் பிரியை என்கிற பிரேமத்தின்படி.
# ஸௌபாக்கியம் தருகிறாள். மேற்கூறிய கூற்றின்படி யாரும் இவள் கூற்றை மறுக்கப் போவதில்லை. ஆகவே எல்லோருடைய அனுக்கிரகத்தையும் பெற்றுத் தருகிறாள். மேலும் பக்தர்கள் பெருமாளை அடைந்து விடும்படி செய்கிறாள். இதுவே பாக்கியங்களில் எல்லாம் உயர்ந்த சௌபாக்கியம்.
# பாக்கியங்களைத் தருகிறாள். பக்தர்களுக்கு இவ்வுலக வாழ்க்கைக்கு தேவைப்படுவதான செல்வங்களை வழங்குவதற்காக, எப்பொழுதும் தனது அருகில் நிதி கோசத்தை வைத்தேயிருக்கிறாள். ஆகவே செல்வம் ஆயுள், ஆரோக்கியம், மக்கட்பேறு முதலிய எல்லா பாக்கியங்களையும் தருகிறாள்.
# பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறாள். பக்தர்கள் என்றாலே தனக்காக எதுவும் பெரிதாக கேட்கமாட்டார்கள், தன் சுவாமிக்கும் ஏனைய மக்களுக்காகவுமே கேட்பார்கள். அப்படி கேட்பவற்றை அனுகிரகித்தும், அதற்குண்டான பலன்களையும் அளிக்கிறாள்.
# அப்படி அவற்றைச் செய்வதற்கான எல்லா சக்தியையும் எப்போதும் கொண்டிருக்கிறாள்.
# இரண்டு கைகளாலும் அபயம் அளிக்கிறாள்.
ஒரு கை அஞ்சாதே என்று அபய ஹஸ்தம். மற்றொன்று திருவடி பற்று என்று வரத ஹஸ்தம். ஆக இரண்டு கைகளாலும் அபயம் அளிக்கிறாள். பெருமாள் கருணாமூர்த்தி என்றபோதிலும் லோகநாதன் என்பதால் சிக்ஷை அளிக்கக் கடமைபட்டவர். ஆகவே சன்னிதி சென்றதும் நம் மேல் கருணை வருமா, நம் குற்றங்களை எண்ணி கோபம் வருமா என்கிற தோன்றலாம். அதற்காகவே பிராட்டி தன் திருவடி காட்டி பற்றச் செய்து, பின்னர் அபய ஹஸ்தத்தால் அஞ்சாதே! பெருமாளைக் கண்டு அஞ்சாதே ! அவர் அனுகிரஹிக்கும் படி செய்கிறோம் என்று சொல்லாமல் சொல்லுவதாய் உள்ளது.
No comments:
Post a Comment