Sri Venkateshwara Stotram - Sloka 6
॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥
अभिरामगुणाकर दाशरथे जगदेकधनुर्धर धीरमते ।
रघुनायक राम रमेश विभो वरदो भव देव दयाजलधे ॥ ६॥
அபி⁴ராமகு³ணாகர தா³ஶரதே² ஜக³தே³கத⁴னுர்த⁴ர தீ⁴ரமதே |
ரகு⁴நாயக ராம ரமேஶ விபோ⁴ வரதோ³ ப⁴வ தே³வ த³யாஜலதே⁴ || 6||
abhirāmaguṇākara dāśarathe jagadekadhanurdhara dhīramate ।
raghunāyaka rāma rameśa vibho varado bhava deva dayājaladhe ॥ 6॥
अभिराम - அபி⁴ராம - எல்லாருடைய மனமும் ரமிக்கும்படி செய்பவனே !
गुणाकर - கு³ணாகர - அனேக கல்யாண குணங்களையுடையவனே !
दाशरथे - தா³ஶரதே² - தசரதனின் புதல்வனே !
जगत्-एक-धनुर्धर - ஜக³த்-ஏக-த⁴னுர்த⁴ர - உலகின் ஒரே சிறந்த வில்லாளியே !
धीर-मते - தீ⁴ர-மதே - நிலைத்த சித்தமுள்ளவனே !
रघु-नायक - ரகு⁴-நாயக - ரகு குல நாயகனே !
रमा-ईश - ரமா-ஈஶ - ரமா எனும் சீதையின் தலைவனே !
विभो - விபோ⁴ - எங்கும் வியாபித்தவனே !
राम - ராம - ( ஹே ) ராம !
देव - தே³வ - பல லீலைகளை செய்பவனே !
दया-जलधे - த³யா-ஜலதே⁴ - கருணைக்கடலே !
वरदो भव - வரதோ³ ப⁴வ - ( என்றும் எங்களுக்கு ) அருள்பவனாய் இரு.
பொருள் :
எல்லாருடைய மனமும் ரமிக்கும்படி செய்பவனே ! அனேக கல்யாண குணங்களையுடையவனே ! தசரதனின் புதல்வனே ! உலகின் ஒரே சிறந்த வில்லாளியே ! நிலைத்த சித்தமுள்ளவனே ! ரகு குல நாயகனே ! ரமா எனும் சீதையின் தலைவனே ! எங்கும் வியாபித்தவனே ! ( ஹே ) ராம ! பல லீலைகளை செய்பவனே ! கருணைக்கடலே ! என்றும் எங்களுக்கு அருள்பவனாய் இரு. 6
Meaning :
Oh the treasure house of all auspicious GuNAs revered by every one ! Oh the son of DhasarathA ! Oh matchless archer in all the Universe ! Oh Lord of firm sankalpam ! Oh the chief of Raghu Kulam ! Oh SupremeLord! Oh effulgent One ! Oh Ocean of Mercy ! May Thou assume the role of the boon giver (Varadhan) and bless us ! 6
(Comments):
Here the prayer is shifting to Sri VenkatarAman , who declared His SaraNAgathivratham as " DhadhAmyEthath Vratham mama ".
No comments:
Post a Comment