Monday, 3 September 2018

Harihara abheda Stuti - Sloka 3

Harihara abheda Stuti - Sloka 3

॥ हरिहराभेद स्तुतिः ॥

||  ஹரிஹராபே⁴த³ ஸ்துதி​: ||

॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥

कृष्णतनुमुमार्धतनुं श्वशुरगृहस्थं सुमेरुशृङ्गस्थम् ।
दशवपुषं वसुवपुषं वन्दे भूजानिमखिलभूपालम् ॥ ३॥

க்ருʼஷ்ணதனுமுமார்த⁴தனும்ʼ ஶ்வஶுரக்³ருʼஹஸ்த²ம்ʼ ஸுமேருஶ்ருʼங்க³ஸ்த²ம் |
த³ஶவபுஷம்ʼ வஸுவபுஷம்ʼ வந்தே³ பூ⁴ஜானிமகி²லபூ⁴பாலம் ||  3||

kṛṣṇatanumumārdhatanuṃ śvaśuragṛhasthaṃ sumeruśṛṅgastham ।
daśavapuṣaṃ vasuvapuṣaṃ vande bhūjānimakhilabhūpālam ॥ 3॥

कृष्ण-तनुं  -  க்ருʼஷ்ண-தனும்ʼ  -  கருத்த சரீரத்தையுடையவரை,

उमा-अर्ध-तनुं   -  உமா-அர்த⁴-தனும்ʼ  -   பார்வதியை பாதி சரீரமாகக் கொண்டவரை,

श्वशुर-गृहस्थं  -  ஶ்வஶுர-க்³ருʼஹஸ்த²ம்ʼ    -   மாமனாரின் இடமான திருப்பாற்கடலில் வஸிப்பவரை,

सुमेरु-शृङ्गस्थं  -  ஸுமேரு-ஶ்ருʼங்க³ஸ்த²ம்ʼ  -   மஹாமேரு மலையின் சிகரத்தில் இருப்பவரை,

दश-वपुषं  -  த³ஶ-வபுஷம்ʼ  -   பத்துவிதமான சரீரங்களை ( அவதாரங்களை ) எடுத்தவரை,

वसु-वपुषं  -  வஸு-வபுஷம்ʼ   -   பஞ்சபூதங்கள்,சூரியன், சந்திரன், யாகம் செய்பவன் என்ற எட்டு ( அஷ்ட வஸு )  சரீரத்தையுடையவரை,

भू-जानिं  -  பூ⁴-ஜானிம்ʼ   -   பூதேவியை மனைவியாகக் கொண்டவரை,

अखिल-भू-पालं  -  அகி²ல-பூ⁴-பாலம்ʼ   -   எல்லா உலகங்களையும் காப்பாற்றுபவரை

वन्दे  -  வந்தே³  -   ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.

பொருள் :

கருத்த சரீரத்தையுடையவரும், பார்வதியை பாதி சரீரமாகக் கொண்டவரும், மாமனாரின் இடமான திருப்பாற்கடலில் வஸிப்பவரும், மஹாமேரு மலையின் சிகரத்தில் இருப்பவரும், பத்துவிதமான சரீரங்களை ( அவதாரங்களை ) எடுத்தவரும், பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன், யாகம் செய்பவன் என்ற எட்டு சரீரத்தையுடையவரும், பூதேவியை மனைவியாகக் கொண்டவரும், எல்லா உலகங்களையும் காப்பாற்றுபவருமான, ஹரியையும் ஹரனையும்  வணங்குகிறேன்.   3

Meaning :

I salute, He who has a black body , He whose half body is Uma, He who lives in his father in law's home , He who lives on top of the mountain,

He who took ten bodies , He who has eight vasus as bodies, He who is consort of Bhoodevi and who both protect all the three worlds.  3

No comments:

Post a Comment