Wednesday, 5 September 2018

Harihara abheda Stuti - Sloka 5

Harihara abheda Stuti - Sloka 5

॥ हरिहराभेद स्तुतिः ॥

||  ஹரிஹராபே⁴த³ ஸ்துதி​: ||

॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥

ब्रह्मसुतमृगातिनुतं गजगिरिवासं गजेन्द्रचर्माङ्गम्।
सुरशरणं हरिशरणं वन्दे भूदारमखिलभूदारम् ॥ ५॥ *

ப்³ரஹ்மஸுதம்ருʼகா³தினுதம்ʼ க³ஜகி³ரிவாஸம்ʼ க³ஜேந்த்³ரசர்மாங்க³ம்|
ஸுரஶரணம்ʼ ஹரிஶரணம்ʼ வந்தே³ பூ⁴தா³ரமகி²லபூ⁴தா³ரம் ||  5||

brahmasutamṛgātinutaṃ gajagirivāsaṃ gajendracarmāṅgam।
suraśaraṇaṃ hariśaraṇaṃ vande bhūdāramakhilabhūdāram ॥ 5॥

ब्रह्म-सुतं  -  ப்³ரஹ்ம-ஸுதம்ʼ  -   பிரம்மதேவனைப் புதல்வனாய்க் கொண்டவரை,

ऋक‌्-आदि-नुतं  -  ருʼக்-ஆதி³-நுதம்ʼ  -  ருக்வேதம் முதலானவற்றால் துதிக்கப் பெற்றவரை,

गज-गिरि-वासं  -  க³ஜ-கி³ரி-வாஸம்ʼ  -  ஹஸ்திகிரியில் வஸிப்பவரை ( ஶ்ரீ வரதராஜன் ),

गजेन्द्र-चर्म-अङ्गं  -  க³ஜேந்த்³ர-சர்ம-அங்க³ம்ʼ -  யானைத்தோலைப் போர்த்தவரை,

सुर-शरणं  -  ஸுர-ஶரணம்ʼ  -  தேவர்களுக்கு சரண்யனை,

हरि-शरणं  -  ஹரி-ஶரணம்ʼ  -  விஷ்ணுவிற்கு சரண்யனை ( காப்பாற்றுபவர் ),

भू-दारं  -  பூ⁴-தா³ரம்ʼ  -  பூதேவியை மனைவியாகக் கொண்டவரை,

अखिल-भू-दारं  -  அகி²ல-பூ⁴-தா³ரம்ʼ  -  எல்லா உலகங்களுக்கும் பதியை

वन्दे  -  வந்தே³  -   ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.

பொருள் :

பிரம்மதேவனைப் புதல்வனாய்க் கொண்டவரும், ருக்வேதம் முதலானவற்றால் துதிக்கப் பெற்றவரும், ஹஸ்திகிரியில் வஸிப்பவரும் ( ஶ்ரீ வரதராஜன் ), யானைத்தோலைப் போர்த்தவரும், தேவர்களுக்கு சரண்யனும், விஷ்ணுவிற்கு சரண்யனும் ( காப்பாற்றுபவர் ), பூதேவியை மனைவியாகக் கொண்டவரும், எல்லா உலகங்களுக்கும் பதியுமான ஹரியையும் ஹரனையும் வணங்குகிறேன்.   5

Meaning :

Salutations to, He whose son is Brahma, he who is praised by Vedas, He who lives on elephant mountain, He who wears hide of king of elephants,

He who is the protector of devas, He protects Hari, he who is consort of the bhoodevi and He who is the lord of the entire universe.   5

* பாடபேதம் --
अचल भू-दारं  -  அசல பூ⁴-தா³ரம்ʼ  -  மலைமகளின் ( பார்வதி தேவி ) பதியை  -  consort of Parvati.

No comments:

Post a Comment