Harihara abheda Stuti - Sloka 7
॥ हरिहराभेद स्तुतिः ॥
|| ஹரிஹராபே⁴த³ ஸ்துதி: ||
॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥
पीतपटमरुणजटं परिमलदेहं पवित्रभस्माङ्गम्।
जलजकरं डमरुकरं वन्दे योगस्थमखिलयोगीड्यम् ॥ ७॥
பீதபடமருணஜடம்ʼ பரிமலதே³ஹம்ʼ பவித்ரப⁴ஸ்மாங்க³ம்|
ஜலஜகரம்ʼ ட³மருகரம்ʼ வந்தே³ யோக³ஸ்த²மகி²லயோகீ³ட்³யம் || 7||
pītapaṭamaruṇajaṭaṃ parimaladehaṃ pavitrabhasmāṅgam।
jalajakaraṃ ḍamarukaraṃ vande yogasthamakhilayogīḍyam ॥ 7॥
पीत-पटं - பீத-படம்ʼ - பீதாம்பரம் ( மஞ்ஜளாடை ) அணிந்தவரை,
अरुण-जटं - அருண-ஜடம்ʼ - சிவப்பு ஜடைகளைத் தரித்தவரை,
परिमल-देहं - பரிமல-தே³ஹம்ʼ - நறுமணம் கமழும் உடலையுடையவரை,
पवित्र-भस्म-अङ्गं - பவித்ர-ப⁴ஸ்ம-அங்க³ம்ʼ - தூய்மையான விபூதியை அணிந்தவரை,
जलज-करं - ஜலஜ-கரம்ʼ - சங்கைக் கையில் ஏந்தியவரை,
डमरु-करं - ட³மரு-கரம்ʼ - உடுக்கையைக் கையில் தரித்தவரை,
योगस्थं - யோக³ஸ்த²ம்ʼ - யோகநிலையில் இருப்பவரை,
अखिल-योगि-ईड्यं - அகி²ல-யோகி³-ஈட்³யம்ʼ - யோகிகளனைவராலும் துதிக்கப் பெற்றவருமான
वन्दे - வந்தே³ - ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.
பொருள் :
பீதாம்பரம் ( மஞ்ஜளாடை ) அணிந்தவரும், சிவப்பு ஜடைகளைத் தரித்தவரும், நறுமணம் கமழும் உடலையுடையவரும், தூய்மையான விபூதியை அணிந்தவரும், சங்கைக் கையில் ஏந்தியவரும், உடுக்கையைக் கையில் தரித்தவரும், யோகநிலையில் இருப்பவரும், யோகிகளனைவராலும் துதிக்கப் பெற்றவருமான ஹரியையும் ஹரனையும் வணங்குகிறேன். 7
Meaning :
Salutations to, He who wears yellow cloths , He who has red tuft , He who has scented body , He who is pure and wearing sacred ash.
He who holds the conch, he who holds a drum, Him who is in Yoga and worshipped by all yogis. 7
No comments:
Post a Comment