Tuesday, 25 September 2018

Sri Venkateshwara Stotram - Sloka 2

Sri Venkateshwara Stotram - Sloka 2

॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥

||  ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥

सचतुर्मुखषण्मुखपंचमुखप्रमुखाखिलदैवतमौलिमणे ।
शरणागतवत्सल सारनिधे परिपालय मां वृषशैलपते ॥ २॥

ஸசதுர்முக²ஷண்முக²பஞ்சமுக²ப்ரமுகா²கி²லதை³வதமௌலிமணே |
ஶரணாக³தவத்ஸல ஸாரனிதே⁴ பரிபாலய மாம்ʼ வ்ருʼஷஶைலபதே ||  2||

sacaturmukhaṣaṇmukhapaṃcamukhapramukhākhiladaivatamaulimaṇe ।
śaraṇāgatavatsala sāranidhe paripālaya māṃ vṛṣaśailapate ॥ 2॥

स-चतुर्मुख षण्मुख पंचमुख प्रमुख-अखिल दैवत मौलि-मणे   -   ஸ-சதுர்முக² ஷண்முக² பஞ்சமுக² ப்ரமுக²-அகி²ல தை³வத மௌலி-மணே  -  நான்முகனாகிய பிரம்மா, ஆறுமுகமாகிய முருகன், பஞ்சமுகராகிய பரமசிவனார் மற்றும் பல முக்கியமான தெய்வங்களுக்குள் தலை மகுடம் போன்ற மேலானவரே,

शरणागत-वत्सल   -   ஶரணாக³த-வத்ஸல   -   சரணடைந்தோரைக் ( தாய் பசு தன் கன்றைக் காப்பதுபோல் ) காப்பவரே,

सार-निधे   -   ஸார-நிதே⁴   -   ( வேதங்களால் அறுதியிடப்பட்ட ) சாரத்தின் ( பரமாத்ம ஸ்வரூபம் ) இருப்பிடமே,

वृषशैल-पते   -   வ்ருʼஷஶைல-பதே   -   விருஷபாசலம் என்னும் திருமலையின் அரசே,

मां परिपालय   -   மாம்ʼ பரிபாலய   -   எங்களைக் காபாற்றி அருள்வாய்.

பொருள் :

நான்முகனாகிய பிரம்மா, ஆறுமுகமாகிய முருகன், பஞ்சமுகராகிய பரமசிவனார் மற்றும் பல முக்கியமான தெய்வங்களுக்குள் தலை மகுடம் போன்ற மேலானவரே ! சரணடைந்தோரைக் ( தாய் பசு தன் கன்றைக் காப்பதுபோல் ) காப்பவரே ! வேதங்களால் அறுதியிடப்பட்ட சாரத்தின் ( பரமாத்ம ஸ்வரூபம் ) இருப்பிடமே ! விருஷபாசலம் என்னும் திருமலையின் அரசே ! எங்களைக் காப்பாற்றி அருள்வாய்.   2

Meaning :

Oh Lord of Vrusha sailam ! Oh Crown Jewel of all DevAs and Gods like the four-faced BrahmA , the five-faced Sivan and the six-faced KumAra Swamy ! Oh Lord immensely attached by the bonds of love to those , who seek Your protection ! Please protct me !   2

(Comments):

Oh Lord of VrushA hills ! You overlook the deficiencies ofthose , who perform SaraNAgathi at Your holy feet and look upon that SaraNAgahti as a vyAjam to come to their rescue and bless them fully. Just as poor people at times of grinding poverty access their savings , wecome to You at times of great distress to save us . May You known for such vaibhavam as Saara Nidhi (matchless treasure ) and SaraNAgatha Vatsalan protect me. 

No comments:

Post a Comment