Sri Venkateshwara Stotram - Sloka 8
॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥
सुमुखं सुहृदं सुलभं सुखदं स्वनुजं च सुकायममोघशरम् ।
अपहाय रघूद्वहमन्यमहं न कथञ्चन कञ्चन जातु भजे ॥ ८॥
ஸுமுக²ம்ʼ ஸுஹ்ருʼத³ம்ʼ ஸுலப⁴ம்ʼ ஸுக²த³ம்ʼ ஸ்வனுஜம்ʼ ச ஸுகாயமமோக⁴ஶரம் |
அபஹாய ரகூ⁴த்³வஹமன்யமஹம்ʼ ந கத²ஞ்சன கஞ்சன ஜாது ப⁴ஜே || 8||
sumukhaṃ suhṛdaṃ sulabhaṃ sukhadaṃ svanujaṃ ca sukāyamamoghaśaram ।
apahāya raghūdvahamanyamahaṃ na kathañcana kañcana jātu bhaje ॥ 8॥
सु-मुखं - ஸு-முக²ம்ʼ - மனத்திற்கினிய முகத்தை உடையவனை,
सु-हृदं - ஸு-ஹ்ருʼத³ம்ʼ - நல்ல உள்ளம் கொண்டவனை,
सु-लभं - ஸு-லப⁴ம்ʼ - எளிதில் கிடைக்கக் கூடியவனை,
सुख-दं - ஸுக²-த³ம்ʼ - ஆனந்தம் அளிப்பவரை,
सु-अनुजं च - ஸு-அனுஜம்ʼ ச - நல்ல தம்பிகளை உடையவரை,
सु-कायं - ஸு-காயம்ʼ - அழகிய உடல் வனப்பு உடையவரை,
अमोघ-शरं - அமோக⁴-ஶரம்ʼ - வெற்றியுடன் திரும்பும் அம்புகளை உடையவரை,
रघु-उद्वहं - ரகு⁴-உத்³வஹம்ʼ - ரகுகுலத்திற்கு பெருமை சேர்க்கும் இராமனை
अपहाय अन्यं - அபஹாய அன்யம்ʼ - தவிர்த்து வேறொருவரை
कथञ्चन कञ्चन - கத²ஞ்சன கஞ்சன - எங்கும் எப்பொழுதும்
अहं न जातु भजे - அஹம்ʼ ந ஜாது ப⁴ஜே - நான் துதிக்க மாட்டேன்.
பொருள் :
மனத்திற்கினிய முகத்தை உடையவரும், நல்ல உள்ளம் கொண்டவரும், எளிதில் கிடைக்கக் கூடியவரும், ஆனந்தம் அளிப்பவரும், நல்ல தம்பிகளை உடையவரும், அழகிய உடல் வனப்பு உடையவரும், வெற்றியுடன் திரும்பும் அம்புகளை உடையவரும், ரகுகுலத்திற்கு பெருமை சேர்த்தவருமான இராமனைத் தவிர்த்து, வேறொருவரையும் எங்கும் எப்பொழுதும் நான் துதிக்க மாட்டேன். 8
Meaning :
Oh VenkatEsA ! You are Sri RaamAvathAran. As RaamachandrA, the crest jewel of Raghu Kulam ,You have the most beautiful face andbody, compassionate heart and are easily accessible .You are knownfor Your unfailing arrows. You incarnated with Your brothers as the sons of DasarathA and have the power to grant the boon of Moksham to thosewho sought refuge in You.With all of Your aanatha kalyANa guNams in mind , adiyEn will never seek anyone other than You for my salvation. 8
(Comments):
In the fifth slOkam, the composer of this sthOthram saluted ThiruvEnkatamudayAN as KrishNA and in the slOkams from 6-8 he visualized the Lord of Thirumalai as the Veera Raaghavan , Sundara Raaman and Jaanaki RamaNan .
No comments:
Post a Comment