Sri Venkateshwara Stotram - Sloka 10
॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥
अहं दूरतस्ते पदाम्भोजयुग्मप्रणामेच्छयाऽऽगत्य सेवां करोमि ।
सकृत्सेवया नित्यसेवाफलं त्वं प्रयच्छ प्रयच्छ प्रभो वेङ्कटेश ॥ १०॥
அஹம்ʼ தூ³ரதஸ்தே பதா³ம்போ⁴ஜயுக்³மப்ரணாமேச்ச²யா(அ)(அ)க³த்ய ஸேவாம்ʼ கரோமி |
ஸக்ருʼத்ஸேவயா நித்யஸேவாப²லம்ʼ த்வம்ʼ ப்ரயச்ச² ப்ரயச்ச² ப்ரபோ⁴ வேங்கடேஶ || 10||
ahaṃ dūrataste padāmbhojayugmapraṇāmecchayā''gatya sevāṃ karomi ।
sakṛtsevayā nityasevāphalaṃ tvaṃ prayaccha prayaccha prabho veṅkaṭeśa ॥ 10॥
अहं दूरतः - அஹம்ʼ தூ³ரத: - நான் தூரத்திலிருந்து,
ते पदाम्भोज-युग्म-प्रणाम-इच्छया - தே பதா³ம்போ⁴ஜ-யுக்³ம-ப்ரணாம-இச்ச²யா - உன் திருவடித் தாமரைகளை வணங்கும் ஆசையால்,
आगत्य सेवां करोमि - ஆக³த்ய ஸேவாம்ʼ கரோமி - இங்கு வந்து சேவிக்கிறேன்.
सकृत्-सेवया - ஸக்ருʼத்-ஸேவயா - இந்த ஒருமுறை சேவித்ததற்கே
नित्य-सेवा-फलं प्रयच्छ प्रयच्छ - நித்ய-ஸேவா-ப²லம்ʼ த்வம்ʼ ப்ரயச்ச² ப்ரயச்ச² - நீ , தினமும் சேவித்ததற்கான பலனைத் தர வேண்டும் ! தந்தாக வேண்டும் !
प्रभो वेङ्कटेश - ப்ரபோ⁴ வேங்கடேஶ - ஹே ப்ரபோ ! வேங்கடேசா !
பொருள் :
நான் தூரத்திலிருந்து உன் திருவடித் தாமரைகளை வணங்கும் ஆசையால் இங்கு வந்து சேவிக்கிறேன். இந்த ஒருமுறை சேவித்ததற்கே, நீ , தினமும் சேவித்ததற்கான பலனைத் தர வேண்டும் ! தந்தாக வேண்டும் ! ஹே ப்ரபோ ! வேங்கடேசா ! 10
இங்கு தூரத்திலிருந்து என்பது மதுரை, குமரி, டெல்லி, லண்டன் போன்ற தேசாந்தர தூரம் என்று கொள்வதைவிட,
பகவானின் கல்யாண குணங்களைப் பற்றி அறிய இயலாத, கேட்டறியாத பிறவிகள் பல தாண்டி, ஏதோ ஒருவகையில் பிரதிவாதி பயங்கரம் அண்ணா போன்ற ஆசார்ய கடாக்ஷத்தால், இந்த பிறவியில், உன்னைப் பற்றி கேட்க முடிகிறது. இவ்வாறாக வெகு தூரத்திலிருந்து உன் பாதம் வணங்க வேண்டி வந்திருக்கிறேன். நான் மீண்டும் மனம் மாறிவிடுவேனோ... ஹே பிரபோ இந்த ஒருமுறை சேவித்ததோடு நில்லாது மீண்டும் மீண்டும் சேவிக்கும்படி செய்துவிடு.... என்று பக்தன் உருக்கமாக வேண்டுவதாகக் கொள்ளலாம்.
Meaning :
Oh Lord VenkatEsA ! adiyEn has come from afar with the longing to worship Your holy feet this one time. The fierce waves of paapam have tossed me about far and wide and kept adiyEn away from You. The benovolent waves of PuNyam have brought me to Your sannadhi today. adiyEn is saluting You heartily this one time. Please bless me with Mukthi SaamrAjyam , where adiyEn can delight in nithya Kaimkaryam to You. 10
No comments:
Post a Comment