Wednesday, 25 December 2019

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 8

ராம மந்திரம்  -  Rama Mandiram  -  Sloka 8

॥ राम मन्दिरम् ॥

॥ ராம மந்தி³ரம் ॥

॥ RĀMA MANDIRAM ॥

पश्यन्ति ये सर्वगुहाशयस्थं
त्वां चिद्घनं सत्यमनन्तमेकम् ।
अलेपकं सर्वगतं वरेण्यं
तेषां हृदब्जे सह सीतया वस ॥ ६२॥

பஶ்யந்தி யே ஸர்வகு³ஹாஶயஸ்த²ம்
த்வாம் சித்³க⁴நம் ஸத்யமநந்தமேகம் ।
அலேபகம் ஸர்வக³தம் வரேண்யம்
தேஷாம் ஹ்ருʼத³ப்³ஜே ஸஹ ஸீதயா வஸ ॥ 62॥

paśyanti ye sarvaguhāśayasthaṃ
tvāṃ cidghanaṃ satyamanantamekam ।
alepakaṃ sarvagataṃ vareṇyaṃ
teṣāṃ hṛdabje saha sītayā vasa ॥ 62॥

பொருள் :

8.  பரமபுருஷ ! முதலும் முடிவுமற்ற ஏகவஸ்துவாகவும், ஸத்யஸ்வரூபியாகவும், ஸர்வவ்யாபியாகவும், சின்மயானந்த மூர்த்தியாகவும், பற்றில்லாதவராகவும் விளங்குகின்ற தங்களை எல்லோருடைய இதயக் குகையிலும் ப்ரகாசிக்கின்றவராக எவன் காண்கின்றானோ, அவனுடைய ஹ்ருதய கமலபவனத்திலே ஸீதையுடன் கூட தாங்கள் ஸுகமாக வஸிக்கலாம்.  62

Meaning :

8. Those who see thee abiding in the cave of the heart as All Intelligence, Truth, Infinity and Unity, as above all effects, as pervading all, as the worshipful object of all, do you abide in their hearts together with Sita.   62

No comments:

Post a Comment