Vedasaara Shiva Stotram - Sloka 7
॥ वेदसार शिव स्तोत्रम् ॥
॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥
॥ VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥
अजं शाश्वतं कारणं कारणानां
शिवं केवलं भासकं भासकानाम् ।
तुरीयं तमःपारमाद्यन्तहीनं
प्रपद्ये परं पावनं द्वैतहीनम् ॥७॥
அஜம்ʼ ஶாஶ்வதம்ʼ காரணம்ʼ காரணானாம்ʼ
ஶிவம்ʼ கேவலம்ʼ பா⁴ஸகம்ʼ பா⁴ஸகானாம் |
துரீயம்ʼ தம:பாரமாத்³யந்தஹீனம்ʼ
ப்ரபத்³யே பரம்ʼ பாவனம்ʼ த்³வைதஹீனம் || 7||
ajaṃ śāśvataṃ kāraṇaṃ kāraṇānāṃ
śivaṃ kevalaṃ bhāsakaṃ bhāsakānām ।
turīyaṃ tamaḥpāramādyantahīnaṃ
prapadye paraṃ pāvanaṃ dvaitahīnam ॥7॥
Word by word meaning :
अजं - அஜம்ʼ - பிறப்பில்லாதவரும்
शाश्वतं - ஶாஶ்வதம்ʼ - எப்பொழுதும் இருப்பவரும்
कारणानां - காரணானாம்ʼ - காரணப்பொருள்களுக்கும்
कारणं - காரணம்ʼ - காரணமாக இருப்பவரும்
केवलं - கேவலம்ʼ - தான் மாத்திரமாக இருப்பவரும்
भासकानां - பா⁴ஸகானாம்ʼ - பிரகாசிக்கும் வஸ்துக்களையும்
भासकं - பா⁴ஸகம்ʼ - பிரகாசப்படுத்துபவரும்.,
तुरीयं - துரீயம்ʼ - நான்காவது பொருளும் (அவஸ்தையும்)
तमःपारं - தம꞉பாரம்ʼ - அஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவரும்
आदि-अन्त-हीनं - ஆதி³-அந்த-ஹீனம்ʼ - ஆதியும் அந்தமும் இல்லாதவரும்
परं - பரம்ʼ - மேலானவரும்
पावनं - பாவனம்ʼ - பரிசுத்தமானவரும்
द्वैत-हीनं - த்³வைத-ஹீனம்ʼ - இரண்டற்றவருமான
शिवं - ஶிவம்ʼ - சிவனை
प्रपद्ये - ப்ரபத்³யே - சரணமடைகிறேன்.
பொருள் :
பிறக்காதவர், ஆகையால் எப்பொழுதும் இருப்பவர் ( அழிவற்றவர் ), காரணமான பஞ்ச பூதங்களுக்கும் காரணமாக இருப்பவர், மங்களஸ்வரூபி, தனித்து இருப்பவர், ஒளியுள்ள சூரியன் முதலியவற்றையும் பிரகாசிக்கச் செய்பவர்., வ்யஷ்டியில் ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் முறையே அபிமானிகளான விச்வன், தைஜஸன், ப்ராஜ்ஞன் இம்மூவர்களுக்கும்., சமஷ்டியில் வைச்வானரன், ஹிரண்யகர்பன், சூத்ராத்மா இம்மூவர்களுக்கும் மேற்பட்ட நான்காவது பொருள், அஞ்ஞானத்திற்கு அப்பாலிருப்பவர், ஆதியும் அந்தமுமற்றவர், மேலானவர், பரிசுத்தமான பொருள், இரண்டற்றவர், இந்த தத்வத்தை சரணடைகிறேன். 7
Meaning :
I take the refuge in Śiva, Who is without birth, Who is eternal, Who is the reason behind all the reasons, Who is the Only One, Who shines everything that shine others, Who is turīya (pure impersonal state of soul), Who is beyond darkness (tamas), Who is without a beginning and an end, Who is beyond everyone, Who is pure, and Who is without duality. 7
No comments:
Post a Comment