Vedasaara Shiva Stotram - Sloka 6
॥ वेदसार शिव स्तोत्रम् ॥
॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥
॥ VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥
न भूमिर्न चापो न वह्निर्न वायु-
र्न चाकाशमास्ते न तन्द्रा न निद्रा।
न चोष्णं * न शीतं न देशो न वेषो
न यस्यास्ति मूर्तिस्त्रिमूर्तिं तमीडे ॥६॥
ந பூ⁴மிர் ந சாபோ ந வஹ்னிர் ந வாயு-
ர்ந சாகாஶமாஸ்தே ந தந்த்³ரா ந நித்³ரா।
ந சோஷ்ணம்ʼ ந ஶீதம்ʼ ந தே³ஶோ ந வேஷோ
ந யஸ்யாஸ்தி மூர்திஸ்த்ரிமூர்திம்ʼ தமீடே³ || 6||
na bhūmirna cāpo na vahnirna vāyu-
rna cākāśamāste na tandrā na nidrā।
na coṣṇaṃ na śītaṃ na deśo na veṣo
na yasyāsti mūrtistrimūrtiṃ tamīḍe ॥6॥
Word by word meaning :
यस्य - யஸ்ய - எவருக்கு
भूमिः - பூ⁴மி꞉ - பூமி
न - ந - இல்லை
आपः च - ஆப꞉ ச - ஜலமும்
न - ந - இல்லை
वह्निः - வஹ்னி꞉ - தேஜஸ்/அக்னி
न - ந - இல்லை
वायुः - வாயு꞉ - வாயு
न - ந - இல்லை
आकाशं च - ஆகாஶம்ʼ ச - ஆகாசமும்
न आस्ते - ந ஆஸ்தே - இல்லை
तन्द्रा - தந்த்³ரா - சோம்பல்
न - ந - இல்லை
निद्रा - நித்³ரா - தூக்கம்
न - ந - இல்லை
उष्णं च - உஷ்ணம்ʼ ச - சூடும்
न - ந - இல்லை
शीतं - ஶீதம்ʼ - குளிர்ச்சியும்
न - ந - இல்லை
देशः - தே³ஶ꞉ - தேசம்
न - ந - இல்லை
वेषः - வேஷ꞉ - வேஷம்
न - ந - இல்லை
मूर्तिः - மூர்தி꞉ - சரீரம்
नास्ति - நாஸ்தி - இல்லை
त्रिमूर्तिं - த்ரிமூர்திம்ʼ - மும்மூர்த்தி வடிவினரான
तं - தம்ʼ - அவரை
ईडे - ஈடே³ - துதிக்கிறேன்.
பொருள் :
பரமாத்ம தத்வம் ஒன்றே உண்மையில் உள்ளது.நாம் காணும் இப்பிரபஞ்சம் வெறும் தோற்றமே தவிர வாஸ்தவமாக இல்லை. அதாவது பூமி, ஜலம், தேஜஸ், வாயு, ஆகாசம், சோம்பல், தூக்கம், சூடு, குளிர்ச்சி, தேசம், வேஷம் இவை ஒன்றுமேயில்லை. சிலவற்றை மாத்திரம் இங்கு குறிப்பிட்டாலும் ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பது இதன் கருத்து. இவையாவும் உண்மையாக இல்லை, ஆகையினால் பிரபஞ்சம் தோன்றுவது விருத்தமல்ல. பரமாத்மாவுக்கு சரீரம் கிடையாது. ஆனாலும் மாயையிலுள்ள சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொண்டு மூன்று சரீரத்துடன் விளங்குகிறது. ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன் என்று மூன்றாகப் பிரிந்திருந்தாலும் தத்வம் ஒன்று தான், அந்த பரமாத்மாவைப் போற்றுகிறேன். 6
Meaning :
That Lord, Who is not the ground, Who is not the water, Who is not the fire, Who is not the wind, Who is not the skies, Who is not the sleep or deep-sleep, Who is not the heat, Who is not the cold, Who is not a country, Who is not a physical form, and Who does not possess a form — I praise that Lord in the trinity-form. 6
* ग्रीष्मो - grīṣmo - க்³ரீஷ்மோ - வெயில் summer - என்றும் படிப்பதுண்டு.
No comments:
Post a Comment