॥ श्री शिवाष्टकम् ॥
|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||
|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||
मुदामाकरं मण्डनं मण्डयन्तं महामण्डलं भस्मभूषाधरं तम् ।
अनादिं ह्यपारं महामोहमारं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ३॥
முதா³மாகரம்ʼ மண்ட³னம்ʼ மண்ட³யந்தம்ʼ மஹாமண்ட³லம்ʼ ப⁴ஸ்மபூ⁴ஷாத⁴ரம்ʼ தம் .
அநாதி³ம்ʼ ஹ்யபாரம்ʼ மஹாமோஹமாரம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 3..
mudāmākaraṃ maṇḍanaṃ maṇḍayantaṃ mahāmaṇḍalaṃ bhasmabhūṣādharaṃ tam .
anādiṃ hyapāraṃ mahāmohamāraṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 3..
मुदा-मा-करं - முதா³-மா-கரம்ʼ - மகிழ்ச்சியும், செல்வமும் அளிப்பவரை,
मण्डनं मण्डयन्तं - மண்ட³னம்ʼ மண்ட³யந்தம்ʼ - அணிகலன்களுடன் சிறப்பாகக் காட்சியளிப்பவரை,
महामण्डलं - மஹாமண்ட³லம்ʼ - சிறந்து ஒளிர்பவரை,
भस्म-भूषा-धरं - ப⁴ஸ்ம-பூ⁴ஷா-த⁴ரம்ʼ - சாம்பலை (திருநீற்றை) அணிகலனாக அணிந்தவரை,
अनादिं अपारं हि - அநாதி³ம்ʼ அபாரம்ʼ ஹி - தொடக்கமும் முடிவும் அற்றவரும்,
महा-मोह-हारं - மஹா-மோஹ-மாரம்ʼ - கொடிய மயக்கத்தைக் களைபவரை,
तं - தம்ʼ - (இத்தகைய) அவரை,
शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை,
शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை,
शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை,
ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை),
ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.
பொருள் :
மகிழ்ச்சியும், செல்வமும் அளிப்பவரும்; அணிகலன்களுடன் சிறப்பாகக் காட்சியளிப்பவரும், சிறந்து ஒளிர்பவரும், சாம்பலை (திருநீற்றை) அணிகலனாக அணிந்தவரும், தொடக்கமும் முடிவும் அற்றவரும், கொடிய மயக்கத்தைக் களைபவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான அந்த ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 3
Meaning :
I pray You, Śiva, Śańkara, Śambhu, Who scatters happiness [in the world], Who is ornating the universe, Who is the immense universe Himself, Who is possessing the adornment of ashes, Who is without a beginning, Who is without a measure, Who removes the greatest attachments, and Who is the Lord of everyone. 3
# உள்ளத்திற்கு மகிழ்ச்சியும், வெளியுலகில் வாழ ஐச்வர்யங்களையும் அளிப்பவர்.
# பக்தர்கள் ஸமர்ப்பிக்கும் மாலைகளையும் ஆபரணங்களையும் பிரியமுடன் ஏற்று பக்தர் மனம் குளிரும்படி காட்சி தருபவர்.
# மண்டயந்த: - நடர், நடிப்பவர் என்று பொருள். பக்தர்கள் ஸமர்ப்பிப்பது மற்றவர்க்குத் தெரிகிறபடி இருந்தாலும், ஸமர்ப்பிக்க வைத்தது தான் (பகவான்) தான் என்பது மற்றவர்க்குத் தெரியாதபடி மறைத்து நடிக்கும் நடிகர் என்று கொள்ளலாம்.
# மஹா மோஹம் - நெடுங்காலமாகத் தொடர்கின்ற மதிமயக்கம்.
No comments:
Post a Comment