Monday, 15 February 2021

Shiva Astakam - Sloka 2

Shiva Astakam - Sloka 2

॥ श्री शिवाष्टकम् ॥

|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||

|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


गले रुण्डमालं तनौ सर्पजालं महाकालकालं गणेशाधिपालम् ।
जटाजूटभङ्गोत्तरङ्गैर्विशालं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ २॥

க³லே ருண்ட³மாலம்ʼ தனௌ ஸர்பஜாலம்ʼ மஹாகாலகாலம்ʼ க³ணேஶாதி⁴பாலம் .
ஜடாஜூடப⁴ங்கோ³த்தரங்கை³ர்விஶாலம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 2..

gale ruṇḍamālaṃ tanau sarpajālaṃ mahākālakālaṃ gaṇeśādhipālam .
jaṭājūṭabhaṅgottaraṅgairviśālaṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 2..



गले रुण्ड-मालं - க³லே ருண்ட³-மாலம்ʼ - தலையற்ற உடலைக் கழுத்தில் மாலையாயணிந்தவரை, 

तनौ सर्प-जालं - தனௌ ஸர்ப-ஜாலம்ʼ - அரவக் கூட்டங்களைத் தன்னுடலில் அணிந்தவரை, 

महाकाल-कालं - மஹாகால-காலம்ʼ - காலனுக்கும் காலனானவரை, 

गणेश-अधिपालं - க³ணேஶ-அதி⁴பாலம்ʼ - ஆனைமுகத்தோனுக்குத் தலைவரை, 

जटाजूट-भङ्ग-उत्तरङ्गैः विशालं - ஜடாஜூட-ப⁴ங்க³-உத்தரங்கை³꞉ விஶாலம்ʼ - சடை முடியில் தடையுற்ற அலைகளினால் (கங்கையின் அலைகள்) சிறந்து விளங்குபவரை, 

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

தலையற்ற உடலைக் கழுத்தில் மாலையாயணிந்தவரும், அரவக் கூட்டங்களைத் தன்னுடலில் அணிந்தவரும், காலனுக்கும் காலனானவரும், ஆனைமுகத்தோனுக்குத் தலைவனும், சடை முடியில் தடையுற்ற அலைகளினால் (கங்கையின் அலைகள்) சிறந்து விளங்குபவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 2


தனௌ ஸர்ப ஜாலம் - கைகள், இடுப்பில், கழுத்தில், காதுகளில் என்று இங்கொன்று அங்கொன்றாக அநேக ஸர்பங்களை அணிகலனாக அணிந்து காட்சி தருபவர்.

மஹாகாலகாலம் - பிரளய காலத்தில் முழு சிருஷ்டியையும் தன்னுட்கொள்ளும் ஈச்வர ஸ்வரூபம் என்று கொள்ளலாம். 
தினத்தின் முடிவு; பால்யம், இளமை, முதுமை முதலிய நிலைகளின் முடிவு; பின்னர் ஆயுளின் முடிவு என்று பெரிதாக நீண்ட மஹாகாலத்திற்கும் காலமானவர். அதாவது அநாதி ஜனன மரண சுழற்சியின் முடிவு. அந்த முடிவும், முடிவின் வழியும் என்றும் கொள்ளலாம்.


Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who has a garland of skull around the neck, Who has a net of snakes around His body, Who is the destroyer of the immense-destroyer Kāla, Who is the lord of Gaṇeśa, Whose matted-hair are spread-out by the presence of the waves of Gańgā falling on His head, and Who is the Lord of everyone. 2


பாடபேதம் -

जटाजूट-गङ्ग-उत्तरङ्गैः विशिष्यं - ஜடாஜூட-க³ங்க³-உத்தரங்கை³꞉ விஶிஷ்யம்ʼ - சடைமுடியில் கங்கை அலைமோதுகின்ற ஆனந்தத்தை விசேஷமாகக் கொண்டவர்.

No comments:

Post a Comment