Monday, 8 February 2021

Shiva Astakam - Sloka 1

Shiva Astakam - Sloka 1

॥ श्री शिवाष्टकम् ॥

|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||

|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||


प्रभुं प्राणनाथं विभुं विश्वनाथं जगन्नाथनाथं सदानन्दभाजम् ।
भवद्भव्यभूतेश्वरं भूतनाथं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ १॥

ப்ரபு⁴ம்ʼ ப்ராணநாத²ம்ʼ விபு⁴ம்ʼ விஶ்வநாத²ம்ʼ ஜக³ந்நாத²நாத²ம்ʼ ஸதா³னந்த³பா⁴ஜம் .
ப⁴வத்³ப⁴வ்யபூ⁴தேஶ்வரம்ʼ பூ⁴தநாத²ம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 1..

prabhuṃ prāṇanāthaṃ vibhuṃ viśvanāthaṃ jagannāthanāthaṃ sadānandabhājam .
bhavadbhavyabhūteśvaraṃ bhūtanāthaṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 1..


प्रभुं - ப்ரபு⁴ம்ʼ - பிரபுவானவரை, 

प्राण-नाथं - ப்ராண-நாத²ம்ʼ - ஆருயிர்த் தலைவரை, 

विभुं - விபு⁴ம்ʼ - எங்கும் நீக்கமற நிறைந்தவரை, 

विश्व-नाथं - விஶ்வ-நாத²ம்ʼ - உலகனைத்தையும் ஆள்பவரை, 

जगन्नाथ-नाथं - ஜக³ந்நாத²-நாத²ம்ʼ - உலகின் தலைவரான திருமாலுக்கும் தலைவரை, 

सदा-आनन्द-भाजं - ஸதா³-ஆனந்த³-பா⁴ஜம்ʼ - எப்பொழுதும் ஆனந்தத்துக்கு உறைவிடமானவரை, 

भवत‌् भव्य भूत ईश्वरं - ப⁴வத் ப⁴வ்ய பூ⁴த ஈஶ்வரம்ʼ - நிகழ்காலம், வருங்காலம், கடந்த காலம் ஆகிய முக்காலத்திற்கும் அதிபதியானவரை, 

भूत-नाथं - பூ⁴த-நாத²ம்ʼ - அனைத்து உயிரினங்களுக்கும் தலைவரை, 

शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை, 

शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை, 

शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை, 

ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை), 

ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.


பொருள் :

பிரபுவானவரும், ஆருயிர்த் தலைவரும், எங்கும் நீக்கமற நிறைந்தவரும், உலகனைத்தையும் ஆள்பவரும், உலகின் தலைவரான திருமாலுக்கும் தலைவரும், எப்பொழுதும் ஆனந்தத்துக்கு உறைவிடமானவரும், முக்காலத்திற்கும் அதிபதியானவரும், அனைத்து உயிரினங்களுக்கும் தலைவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 1


Meaning :

I pray You, Śiva, Śańkara, Śambhu, Who is the Lord, Who is the Lord of our lives, Who is Vibhu, Who is the Lord of the world, Who is the Lord of Viṣṇu (Jagannātha), Who is always dwelling in happiness, Who imparts light or shine to everything, Who is the Lord of living beings, Who is the Lord of ghosts, and Who is the Lord of everyone. 1


ப்ரபு - அனைத்தையும் அடக்கியாளும் வல்லமை பொருந்தியவர்,
ப்ராணநாத - ஓர் உடல் என்று எடுத்துக்கொண்டால், அதில் உறையும் பிராணனுக்குத் தலைவர்.
பூதநாத ‍- உயிருள்ளவை என்னும் இனத்திற்கே தலைவர். அல்லது பூதகணங்களுக்குத் தலைவர்.
விச்வநாத - உலகனைத்திற்கும் தலைவர்.
ஜகந்நாத நாத - உலகை ஆளும் திருமாலால் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்.
சிவ - மும்மலங்களின் ஸம்பந்தமற்ற, அனாதி கர்ம வாசனைகளற்ற, பரிசுத்தமான என்று பொருள்., மங்களஸ்வரூபி.
சம்பு - சுகத்துக்கு இருப்பிடமானவர். தானே சுகத்தை அளிப்பவர்.
சங்கர - (பிறர் மூலம்) நன்மையைச் செய்பவர்.

மேலும் வருமிடங்களில் இச்சொற்களுக்கு இவ்வாறே பொருள் கொள்க.

No comments:

Post a Comment