Friday, 13 April 2018

Sri Margabandhu Stotram - Sloka 1

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

फालावनम्रत्किरीटं फालनेत्रार्चिषा दग्ध पञ्चेषुकीटम्।
शूलाहतारातिकूटं शुद्धमर्धेन्दुचूडं भजे मार्गबन्धुम्॥१॥

பா²லாவனம்ரத்கிரீடம்ʼ பா²லனேத்ரார்சிஷா த³க்³த⁴ பஞ்சேஷுகீடம்|
ஶூலாஹதாராதிகூடம்ʼ ஶுத்³த⁴மர்தே⁴ந்து³சூட³ம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்|| 1||

phālāvanamratkirīṭaṃ phālanetrārciṣā dagdha pañceṣukīṭam।
śūlāhatārātikūṭaṃ śuddhamardhenducūḍaṃ bhaje mārgabandhum॥1॥

பிரதி பத அர்த்தம் :

फाल - பா²ல - தலையில்

अवनम्रत् - அவனம்ரத் - வணங்காத

किरीटं - கிரீடம்ʼ - கிரீடத்தை

फाल-नेत्र - பா²ல-நேத்ர - நெற்றிக் கண்ணின்

अर्चिषा - அர்சிஷா - நெருப்பினால்

दग्ध - த³க்³த⁴ - எரித்தவரை

पञ्चेषु - பஞ்சேஷு - ஐந்து அம்புகள் உடையவனை - காம தேவனை

कीटम् - கீடம் - புழுவைப் போன்று

शूल - ஶூல - சூலத்தால்

आहत - ஆஹத - தாக்கி அழித்தவரை

अराति-कूटं - அராதி-கூடம்ʼ - பகைவர்கள் கூட்டத்தை

शुद्धं - ஶுத்³த⁴ம்ʼ - சுத்தமானவரை

अर्धेन्दु - அர்தே⁴ந்து³ - பிறை / அரை சந்திரனை

चूडं - சூட³ம்ʼ - தலையில் சூடியவரை

मार्गबन्धुम् - மார்க³ப³ந்து⁴ம் - வழித்துணைவரை - மார்கபந்தீஸ்வரரை

भजे - ப⁴ஜே - பஜிக்கிறேன் / வணங்குகிறேன்.

பொருள் :

தலையில் யாருக்கும் வணங்காத கிரீடத்தை ( ஜடாபாரத்தையே கிரீடமாக ) உடையவரை, நெற்றிக் கண்ணின் நெருப்பினால் புழுவைப் போன்று ( எளிதாக ) ஐந்து அம்புகள் உடையவனை ( காம தேவனை ) எரித்தவரை, சூலத்தால் பகைவர்கள் கூட்டத்தை தாக்கி அழித்தவரை , சுத்தமானவரை ( மாயை, அஞ்ஞானம் இவைகளுக்கு அப்பாற்பட்டவரை ), பிறை /அரை சந்திரனை தலையில் சூடியவரை, வழித்துணைவரை - மார்கபந்தீஸ்வரரை வணங்குகிறேன். 1

Meaning :

I worship Lord Margabandu who wears a crown, who destroyed the insect like god of love with the fire from His eye in His forehead, who destroyed the enemies (of gods) with His Trident, who is pure(i.e.) beyond maya and ignorance and who wears the moon on His head as an onament. 1

பதம் பிரிப்பு :

फाल अवनम्रत् किरीटं, फाल-नेत्र-अर्चिषा दग्ध पञ्च-इषु-कीटम् ।
शूल आहत अराति-कूटं, शुद्धं, अर्ध-इन्दु चूडं, भजे मार्गबन्धुम्॥

பா²ல அவனம்ரத் கிரீடம்ʼ, பா²ல-நேத்ர-அர்சிஷா த³க்³த⁴ பஞ்ச-இஷு-கீடம் |
ஶூல ஆஹத அராதி-கூடம்ʼ, ஶுத்³த⁴ம்ʼ, அர்த⁴-இந்து³ சூட³ம்ʼ, ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்||

விளக்கவுரை :

1. பா²ல அவனம்ரத் கிரீடம்ʼ :

தலையில் வணங்காத கிரீடம் உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தலையில் சாய்வாக ஜடாபாரம் கிரீடம் தாங்கியவர். ஈச்வரர் தனிப்பட்ட தங்க வைர கிரீடங்களை அணியாமல் , தன் ஜடாபாரத்தையே கிரீடம் போன்று அணிந்துள்ளார். அதுவே கண்ணுக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது .
மேலும் ஈச்வரர் எதிரிகளுக்கு தலை வணங்குவதில்லை. எதிரிகள் என்பது அவருடைய பக்தர்களின் எதிரிகள், அதாவது பக்தர்களைக் கெடுக்கும் துஷ்டர்கள், மற்றும் பக்தியைக் கெடுக்கும் காமம் , கோபம் முதலிய ஆந்தரீக எதிரிகள். பக்தர்களை இவ்வெதிரிகளிடமிருந்து காக்கிறார், ஈச்வரர்.

மேலும் ' பால ' பதத்திற்கு பதிலாக ' பாத ' என்ற பாடபேதமும் காணமுடிகிறது. அதன்படி , இந்த்ராதி தேவர்கள் ஈச்வரரின் பாதங்களில் விழுந்து வணங்கும்போது அவர்களுடைய கிரீடங்கள் ஈச்வரர் பாதங்களில் படுகிறது என்று பொருள் கொள்ளலாம். எல்லோருக்கும் மேற்பட்ட ஈச்வரர் என்ற பொருள் தருகிறது. அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. பா²ல-நேத்ர-அர்சிஷா த³க்³த⁴ பஞ்ச-இஷு-கீடம் :

நெற்றிக்கண்ணிலிருந்து உண்டான தீப்பொறியால் புழுவென மதிக்கத்தக்க ஐந்து பாணங்களையுடைய மன்மதனை எரித்தவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

சூர்ய சந்த்ர அக்னி லோசனன் என்று ஈச்வரரைச் சொல்வது வழக்கம் . மூன்றாவது கண் அக்னியின் ப்ரதீகம். அதைக் கொண்டு மன்மதனின் ஐந்து அம்புகள், கரும்பு வில், மன்மதனையும் சேர்த்து எரித்ததாக ப்ரஸித்தம். தத்வரீதியாக நோக்கினால் ஐந்து கணைகள் ஐந்து ஞானேந்த்ரியங்கள், கரும்பு வில் மனம், மன்மதன் அஹங்காரம் அல்லது அஞ்ஞானம்.
நெற்றியிலுள்ள மூன்றாவது கண் ஞானக்கண். ஈச்வரர் தன் ஞான பிரகாசத்தால் , ஜீவனின் அஞ்ஞானமாகிய அஹங்காரத்தை நீக்கி, அதன்மூலம் மனம் மற்றும் ஞானேந்த்ரியங்கள் நல்வழிப்படுத்தப்படுகின்றன.

பகவானைத் தன் வித்தையால், தபஸால், சாதுர்யத்தால் பலத்தால் வசப்படுத்திவிடலாம் என்று யோசித்த மன்மதனின் அறிவின்மையைக் குறிக்கவே புழு என்னும் அடைமொழி ஏற்பட்டிருக்க வேண்டும்.

மன்மதனுடைய ஐந்து கணைகளாவன:

முதற் கணை = தாமரை. நடுக் கணை = அசோகம்.
கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை.

மன்மதன் தொடுக்கும் மலரம்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் காதல் நோயை உண்டாக்கக்கூடியவை. முதலில் செலுத்தப்படும் தாமரை அம்பு, காதலரைப் பற்றிய நினைவைத் தூண்டி அவர்பால் காதல்போதையைத் தோற்றுவிக்குமாம். அசோகம்பூ ஊண் மறக்கச் செய்யுமாம். மாம்பூவோ காதலர் நினைவால் மேனியில் பசலை படர்த்த, முல்லை காதற்பித்தைத் தலைக்கேற்றி உன்மத்தம் பீடிக்கச்செய்யுமாம்.

கடைசியாகச் செலுத்தப்படும் நீலோற்பவ மலரம்பு கொடுந்தன்மை கொண்டதாம். அது விரக மேலீட்டால் காதலர் உயிரையும் பறித்துவிடக்கூடியதாம். அதனாலேயே மன்மதன் மனமிரங்கி, உயிர் பறிக்கும் அவ்வம்பை விடுத்து மற்ற நான்கு மலரம்புகளை மட்டுமே எய்து காதல் நோயுண்டாக்குவதாக இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நினைக்கு மரவிந்தம் நீள்பசலை மாம்பூ
வனைத்துணவு நீக்கு மசோகு - வனத்திலுறு
முல்லை கிடைகாட்டு மாதே முழுநீலங்
கொல்லுமத னம்பின் குணம்.

3. ஶூல ஆஹத அராதி-கூடம்ʼ :

சூலத்தால் பகைவர் கூட்டங்களத் தாக்கி அழிப்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன்.)

சூலம் , த்ரிசூலம் என்பது சிவபெருமான் கையில் தரித்திருக்கும் ஆயுதம். இது ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது . முக்குணங்களிலிருந்து தான் மனம் முதலிய இந்த்ரியங்களும் , பஞ்சபூதங்களும் , இவ்வாறாக பிரபஞ்சமே தோன்றுகிறது . ஈச்வரர் அதைத் தன்னிடம் வைத்துள்ளது, இப்பிரபஞ்சத்தின் எல்லா செயல்பாடுகளும் அவர் தன் வசத்திலேயே வைத்திருக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறது . ஈச்வரர் தன் த்ரிசூலத்தால் அநேக துஷ்டர்களை அழித்து சாதுக்களைக் காக்கிறார். ஆயுதம் தாங்கிய ஈச்வரர் , நம்மைக் காக்க, நம்முடன் வழித்துணையாக வருகின்ற மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. ஶுத்³த⁴ம்ʼ :

சுத்தமானவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

எக்காலத்துக்கும் மாயைக்கும் அதனால் உண்டாகும் அவித்யை போன்றவற்றுக்கும் உட்படாது, சுத்தமாக தெளிந்து இருப்பவர் என்று பொருள். அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

5. அர்த⁴-இந்து³ சூட³ம்ʼ :

பிறைச்சந்திரனை சூடியவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

எக்காலத்துக்கும் மாயைக்கும் அதனால் உண்டாகும் அவித்யை போன்றவற்றுக்கும் உட்படாது, சுத்தமாக தெளிந்து இருப்பவர் என்று பொருள்.

பிறைச்சந்திரனை
ஈச்வரர் தன் ஜடாபாரத்தில் சூடியிருக்கிறார். இந்த பிறைச் சந்திரன் , ஞானரூபத்தைக் குறிப்பதாக சைவாகமங்கள் கூற்று.
இதிலும் கவனிக்கத்தக்கது, ஈச்வரர் கிரீடத்துடன் இருப்பினும் , கிரீடத்திற்கு வெளியிலேயே சந்திரன் எப்போதும் விளங்குகிறது. கிரீடம் ஆளுமையைக் கிறிப்பது. ஈச்வரர் உலகையே ஆள்பவர் ஆனால் இந்த ஆளுமைச் செயல்களால் அவரது ஞானம் தாக்கமடைவதில்லை. இதனால் அறியவேண்டியது நம் என்னென்ன கர்மங்களைச் செய்ய வேண்டுமோ அதை உரியமுறையில் செயலாற்ற வேண்டும். ஆற்றியபோதும் ஞானத்திலிருந்து பிறழாது இருக்க வேண்டும் . நம்மை அவ்விதம் வைக்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள் . அதை முன்னமே எடுத்துரைத்திருக்கிறேன்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற வ பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||

1 comment:

  1. அருமையான விளக்கங்கள். நன்றி.

    ReplyDelete