Friday, 13 April 2018

Sri Margabandhu Stotram - Sloka 2

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

अङ्गे विराजद्भुजङ्गं
अभ्रगङ्गातरङ्गाभिरामोत्तमाङ्गं
ओंकारवाटीकुरङ्गं सिद्धसंसेविताङ्घ्रिं
भजे मार्गबन्धुम् ।

அங்கே³ விராஜத்³பு⁴ஜங்க³ம்ʼ
அப்⁴ரக³ங்கா³தரங்கா³பி⁴ராமோத்தமாங்க³ம்ʼ
ஓங்காரவாடீகுரங்க³ம்ʼ ஸித்³த⁴ஸம்ʼஸேவிதாங்க்⁴ரிம்ʼ
ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் |

aṅge virājadbhujaṅgaṃ
abhragaṅgātaraṅgābhirāmottamāṅgaṃ
oṃkāravāṭīkuraṅgaṃ siddhasaṃsevitāṅghriṃ
bhaje mārgabandhum ।

பிரதி பத அர்த்தம் :

अङ्गे - அங்கே³ - ( உடலின் பல்வேறு ) அங்கங்களில்,

विराजत् - விராஜத் - அணிந்தவரை,

भुजङ्गं - பு⁴ஜங்க³ம்ʼ - பாம்பை,

अभ्र-गङ्गा-तरङ्ग - அப்⁴ர-க³ங்கா³-தரங்க³ - ஆகாயகங்கையின் அலைகளால்,

अभिराम - அபி⁴ராம - ஆனந்தம் கொள்ளும்,

उत्तम-अङ्गं - உத்தம-அங்க³ம்ʼ - தலையை உடையவரை,

ओंकार-वाटी - ஓங்கார-வாடீ - ஓங்காரமாகிய சோலையிலுள்ள,

कुरङ्गं - குரங்க³ம்ʼ - மான் போன்றவரை,

सिद्ध - ஸித்³த⁴ - சித்தர்களால்,

संसेवित - ஸம்ʼஸேவித - வணங்கப்படும்,

अङ्घ्रिं - அங்க்⁴ரிம்ʼ - திருப்பாதங்களை உடையவரை,

मार्गबन्धुम् - மார்க³ப³ந்து⁴ம் - வழித்துணைவரை - மார்கபந்தீச்வரரை,

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.

பொருள் :

பாம்புகளை அலங்காரமாகத் தனது ( உடலின் பல்வேறு ) அங்கங்களில் கொண்டவரை, ஆகாயகங்கையின் அலைகளால் ஆனந்தம் கொள்ளும் தலையை உடையவரை, ஓங்காரமாகிய சோலையிலுள்ள மான் போன்றவரை, ( அடைய வேண்டியதை அடைந்துவிட்ட ) சித்தர்களால் வணங்கப்படும் திருப்பாதங்களை உடையவரை, மார்க்கபந்தீச்வரரை வழிபடுகிறேன். 2

Meaning :

I worship Lord Margabandhu on whose limbs snakes appear prominently, whose head looks charming with the waves of the celestial river Ganga, who is like a deer in the garden of Omkara and whose feet are served by siddhas (great seers). 2

பதம் பிரிப்பு :

अङ्गे विराजत् भुजङ्गं,
अभ्र-गङ्गा-तरङ्ग अभिराम उत्तम-अङ्गं,
ओंकार-वाटी कुरङ्गं, सिद्ध संसेवित अङ्घ्रिं,
भजे मार्गबन्धुम् ।

அங்கே³ விராஜத் பு⁴ஜங்க³ம்ʼ,
அப்⁴ர-க³ங்கா³-தரங்க³ அபி⁴ராம உத்தம-அங்க³ம்ʼ,
ஓங்கார-வாடீ குரங்க³ம்ʼ, ஸித்³த⁴ ஸம்ʼஸேவித அங்க்⁴ரிம்ʼ,
ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் |

விளக்கவுரை :

1. அங்கே³ விராஜத் பு⁴ஜங்க³ம்ʼ :

பாம்புகளை அலங்காரமாகத் தனது அங்கங்களில் கொண்டவரை( மார்கபந்துவை வணங்குகிறேன். )

பாம்புகளைக் கண்டால் மக்கள் பயப்படத்தான் செய்கிறார்கள். பாம்பு கடித்தால் விஷம் ஏறி இறக்க நேரிடும் என்ற காரணத்தினால். ஆனால் ஈச்வரரோ ஜடையில், கழுத்தில் , கைகளில் , கால்களில், இடுப்பில் என உடல் முழுதும் ஸர்பங்களையே பூஷணமாகப் பூண்டுள்ளார். அதாவது அவருக்கு பாம்பின் பெயரில் பயமில்லை.

மரணத்தை கால ஸர்ப்பம் என்றும் குறிப்பிடுவதுண்டு. அதாவது காலம் என்னும் பாம்பு என்று பொருள். ஈச்வரருக்கு காலபயம் கிடையாது . அவர் எல்லாவற்றையும் தாண்டி இருப்பவர். காலத்தையும் நடத்துபவர். காலகாலன் எனப்படுகிறார் . மேலும் மரணம் என்பது உடலுக்குத் தான். பரமேச்வரரைத் துதிப்பவர்கள், மரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது . எனவே மரணத்தைக் கண்டு பீதியடைவதில்லை.

அப்படிப்பட்ட தன்மையை நமக்களிக்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. அப்⁴ர-க³ங்கா³-தரங்க³ அபி⁴ராம உத்தம-அங்க³ம்ʼ :

ஆகாயகங்கையின் அலைகளால் ஆனந்தம் கொள்ளும் தலையை உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தேவலோகத்திலிருந்து, எல்லோருக்கும் பயன்தர வேண்டி பூலோகம் வந்த கங்கையை தன் தலையில் ( உத்தமாங்கம் ) தரித்திருக்கிறார், ஈச்வரர் .
அந்த கங்கையின் அலைகளால் ஆனந்திக்கிறார். எனவே தான் அளகானந்தா என்ற பெயர் கங்கைக்கு .
அளகம் - ஜடாபாரம்.

கங்கையை ஞானகங்கை என்றே சொல்வதுமுண்டு. முதலில் உடலைப்பற்றி அறிந்து , பின் அதையும் தாண்டி விசாரம் செய்து, ஹிருதய குஹையில் இருக்கின்ற ( உத்தமாங்கம் - சிறந்த அங்கம், ஈச்வரர் எல்லோருள்ளும் இருதய ஸ்தானத்தில் இருப்பதாக பிரஸித்தம். எனவே அதுவே சிறந்த அங்கம் ) ஞான ஸ்வரூபமான ஆத்மாவில் மனம் ஒன்றி அந்த ஆனந்தத்திலேயே திளைக்கிறது. இது ஆத்ம ஸாக்ஷாத்காரம்.

அவ்வாறு ஆனந்தமடையும்படி செய்யும் ஈச்வரரை மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

3. ஓங்கார-வாடீ குரங்க³ம்ʼ :

ஓங்காரமாகிய சோலையிலுள்ள
மான் போன்றவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்த பின் உலகமும் ஆத்மாவாலானதே என்ற விசாரம் ஏற்படும்.

ஓங்காரம் என்பது பரப்ரஹ்மத்தின் பிரதீகம். ஓங்காரத்தால் ஆனதே இவ்வழகிய உலகம் முழுமையும். அதனால் ஓங்காரத் தோட்டம் என்று இப்படைப்பு குறிக்கப்படுகிறது. அந்தத் தோட்டத்தில் ஓடி விளையாடுவதான அழகான மானும் ஓங்கார ஸ்வரூபமே என்பது இங்கு தெளிவாக்கப்படுகிறது.

அதாவது இப்பிரபஞ்சமும் ப்ரஹ்மம் தான், இந்த ஜீவனும் ப்ரஹ்மம் தான், ஸர்வம் ப்ரஹ்மமயம் என்பதைக் காட்டுகிறது.

அப்படித் தெளிவிக்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. ஸித்³த⁴ ஸம்ʼஸேவித அங்க்⁴ரிம்ʼ :

( அடைய வேண்டியதை அடைந்துவிட்ட ) சித்தர்களால் வணங்கப்படும் பாதங்களை உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

மேற்கூறியவாறு தன்னையும் உலகையும் சிவமயம் என்ற ஞானத்தை அடைந்துவிட்ட ஞானி , அதன் பாதம் பணிகிறான். அஹங்கார ரஹிதனாகிறான். அவன் அருளால் அவன் தாள் பணிவதை இது காட்டுகிறது. அப்படி பணியச் செய்யும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||

No comments:

Post a Comment