Friday, 13 April 2018

Sri Margabandhu Stotram - Sloka 5

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

मन्दारभूतेरुदारं मन्दरागेन्द्रसारं महागौर्यदूरम्।
सिन्दूरदूरप्रचारं सिन्धुराजातिधीरं भजे मार्गबन्धुम्॥५॥

மந்தா³ரபூ⁴தேருதா³ரம்ʼ மந்த³ராகே³ந்த்³ரஸாரம்ʼ மஹாகௌ³ர்யதூ³ரம்|
ஸிந்தூ³ரதூ³ரப்ரசாரம்ʼ ஸிந்து⁴ராஜாதிதீ⁴ரம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்|| 5 ||

mandārabhūterudāraṃ mandarāgendrasāraṃ mahāgauryadūram।
sindūradūrapracāraṃ sindhurājātidhīraṃ bhaje mārgabandhum॥5॥

பிரதி பத அர்த்தம் :

मन्दार - மந்தா³ர - மந்தாரத்தின் ( தேவலோகத்து மரம் )

भूतेः - பூ⁴தே​: - மஹிமையைவிட

उदारं - உதா³ரம்ʼ - மஹிமை ( கொடைத்தன்மை ) வாய்ந்தவரை

मन्दर - மந்த³ர - மந்தரமாகிய

अग-इन्द्र - அக³-இந்த்³ர - சிறந்த மலையின்

सारं - ஸாரம்ʼ - உறுதித்தன்மையாக இருப்பவரை

महागौरि - மஹாகௌ³ரி - மஹாகௌரியை

अदूरम् - அதூ³ரம் - விட்டுப் பிரியாதவரை

दूर-प्रचारं - தூ³ர-ப்ரசாரம்ʼ - எங்கும் பரவுகின்ற

सिन्दूर - ஸிந்தூ³ர - சிவந்த காந்தியை உடையவரை

सिन्धुराज - ஸிந்து⁴ராஜ - சமுத்திரராஜனை விட

अति-धीरं - அதி-தீ⁴ரம்ʼ - சிறந்த தீரரானவரை

मार्गबन्धुम् - மார்க³ப³ந்து⁴ம் - மார்கபந்துவை

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.

பொருள் :

மந்தாரத்தின் ( தேவலோகத்து மரம் ) மஹிமையைவிட மஹிமை ( கொடைத்தன்மை )வாய்ந்தவரை, மந்தரமாகிய சிறந்த மலையின் உறுதித்தன்மையாக இருப்பவரை, மஹாகௌரியை விட்டுப் பிரியாதவரை, எங்கும் பரவுகின்ற சிவந்த காந்தியை உடையவரை, சமுத்திரராஜனை விட சிறந்த தீரரானவரை மார்கபந்துவை வழிபடுகிறேன். 5

Meaning :

I worship Lord Margabandhu who is more generous than the divine Mandara tree, who is stronger than the Mandara mountain, who is close to the great Gauri, who is of crimson colour and who is more profound than the mighty ocean. 5

பதம் பிரிப்பு :

मन्दार-भूतेः उदारं, मन्दर अग-इन्द्र सारं, महागौरि अदूरम्।
सिन्दूर दूर-प्रचारं, सिन्धुराज अति-धीरं, भजे मार्गबन्धुम्॥५॥

மந்தா³ர-பூ⁴தே​: உதா³ரம்ʼ, மந்த³ர அக³-இந்த்³ர ஸாரம்ʼ, மஹாகௌ³ரி அதூ³ரம்|
ஸிந்தூ³ர தூ³ர-ப்ரசாரம்ʼ, ஸிந்து⁴ராஜ அதி-தீ⁴ரம்ʼ, ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்|| 5 ||

mandāra-bhūteḥ udāraṃ, mandara aga-indra sāraṃ, mahāgauri adūram।
sindūra dūra-pracāraṃ, sindhurāja ati-dhīraṃ, bhaje mārgabandhum॥ 5 ॥

விளக்கவுரை :

1. மந்தா³ர-பூ⁴தே​: உதா³ரம்ʼ :-

மந்தார தருவின் மஹிமையை விடவும் மஹிமை வாய்ந்தவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

மந்தார தரு மரம் என்பது தேவலோகத்திலுள்ள ஐந்து மரங்களில் ஒன்று. கற்பகத் தருவைப் போல் கேட்டதைத் தரும் மரம். அது எவ்வளவு கொடைத்தன்மையுடையதோ அதனினும் கொடைத்தன்மை உடையவர் பரமேச்வரர். தன் பக்தர்கள் எதைக் கேட்டாலும் உடன் அருள்பவர். பார்வதி தேவிக்கு மிகவும் பிரியமானதான தங்க நகரத்தை , கேகஸியின் உந்துதலால் ரிஷி விசர்வா பரமேச்வரரிடம் கேட்க உடன் தானம் தந்தவர், ஈச்வரர் . பஸ்மாஸுரன் கேட்டதும் வரம் தந்தவர்.

மற்றுமொரு கருத்து - பொதுவாக மந்தார தரு, கல்பக விருக்ஷம் போன்றவை தன் சன்னிதியில் வைத்து ஏதாவது ஒன்றை வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது வாய்திறந்து கேட்டாலே தந்துவிடும்.

ஒருவர் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தார். சற்றே கால் நோக, ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். மிகவும் பசியும் தாகமும் ஏற்பட, சாப்பிட நல்ல உணவு கிடைத்தால் சாப்பிடலாமே என்று நினைக்க, உடன் சாப்பாடு தோன்றியது . அதிசயமும் சந்தோஷமும் உண்டானது. நன்கு சாப்பிட்டார். பின் குடிக்க தண்ணீர் கிடைத்தால் பரவாயில்லையே என்று நினைக்க தண்ணீர் தோன்றியது . அவர் அம்மரத்தை கேட்டதைத் தரும் விருக்ஷம் என்று அறிந்து கொண்டார். தேவையான எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வோம் என்று எண்ணினார். உண்ட களைப்பு தீர முதலில் உறங்குவோம் என்று தோன்ற, நல்ல மெத்தையிடன் கூடிய கட்டில் வேண்டும் என்று எண்ணினார். கட்டில் தோன்றிற்று. நன்கு படுத்துக் கொண்டார். பின் திடீரென்று விழித்தார். நாம் படுத்திருக்கும் போது புலி வந்தால் என்ன செய்வது என்று யோசிக்கும்போதே புலியும் வந்துவிட்டது . உடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்.

இதிலிருந்து மந்தார தரு கேட்டதைக் கொடுக்கும் எனத் தெரிகிறது, அது நன்மையானாலும் சரி, தீமையானாலும் சரி.
ஒரு வேளை, நல்லதை மட்டுமே நினைப்பிக்கச் செய்து , நிறைவேற்றியும் தரும் விருக்ஷம் இருக்கிறது என்றால் இன்னும் சிறப்பு தானே. அத்தகையவர் பகவானே ! சிவபெருமானே ! என்பது இங்கு குறிக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. மந்த³ர அக³-இந்த்³ர ஸாரம்ʼ :-

உறுதியான மலைகளுள் சிறந்த மந்தர மலையின் உறுதித்தன்மையானவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

மந்தர மலை, பாற்கடலைக் கடையும்போது மத்தாகப் பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்தே அதன் உறுதியை, சக்தியை அறியலாம். ஆனால் அதன் அப்படி அது உறுதியாக இருக்கிறது என்றால் , அதற்கு உறுதித்தன்மை இருப்பதாகப் பொருள். அந்த உறுதித்தன்மை தான் ஸாரம். அந்த ஸாரம் ஈச்வரரே. பலவான்களுடைய பலமாக நான் இருக்கின்றேன் என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறிய கருத்தை ஒப்பிடலாம்.

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

3. மஹாகௌ³ரி அதூ³ரம் :-

சக்திமயமான கௌரியை விட்டுப்பிரியாதவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

கௌரி என்றால் பார்வதி. மஹா கௌரி என்றால் மஹத் தத்வமாகிய கௌரி என்று கொள்ளலாம். ஈச்வரர் நிர்குண பரப்ரம்மம். அவருக்கு செயல்கள் எதுவும் கிடையாது. அவர் செயல்பட்டதாக தெரிய, அவருடயதேயான இயக்க சக்தி வெளிப்படையாக வேண்டும் . அந்த இயக்க சக்தியைத் தான் மாயை என்றும் , பார்வதி, சக்தி , கௌரி என்றெல்லாம் அறிகிறோம். சிவ தத்வத்திற்கு விகாரங்கள் இல்லை. சக்தி தத்வத்திற்கு தனியான இருப்புநிலை இல்லை. சிவ சக்தி தத்வங்கள் ஒன்றோடொன்று கலந்து இருக்கவே இப்பிரபஞ்சமே இருப்பதாகத் தெரிகிறது . ஆக ஈச்வரரும் சக்தியும் விட்டுப் பிரியாதவர்கள். அதையே அதூரம் மஹா-கௌரி- அதூரம் என்ற சொற்றொடர் மூலம் குறிக்கப்படுகிறது. அதூரம் என்றால் தூரமாக இல்லாத , அதாவது அருகில் இருக்கின்ற என்று பொருள். இங்கு விட்டுப்பிரியாத, உடனுறை என்று பொருள்.
அப்படி சக்தியை விட்டுப்பிரியாத மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. ஸிந்தூ³ர தூ³ர-ப்ரசாரம்ʼ :-

எங்கும் பரவும் செந்தூரக் காந்தியுடவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

சிந்தூர என்றால் சிவப்பான செந்தூரம் என்று பொருள். உதயசூரியனின் நிறம் என்பது இன்னும் ஏற்றதாக இருக்கும். அந்த நிறம் வெகு தொலைவு வரை தெரியக்கூடியது . ஸ்ரீ ருத்ரத்தில் கூறியபடி ,

" असौ यस्ताम्रो अरुण उत बभ्रुः सुमङ्गलः । " - " அஸௌ யஸ்தாம்ரோ அருண உத ப³ப்⁴ரு​: ஸுமங்க³ல​: | "

ய​: = ( முன் மந்திரங்களால் கூறப்பட்ட ) பரமேச்வரனே , தாம்ர​: = உதய காலத்தில் மிகவும் சிவப்பாயும், அருண​: = உதயமானவுடன் சொற்பசிவப்பாயும், உத = மேலும் , ப³ப்⁴ரு​: = சற்று நேரத்த்திற்குப் பின் பொன்னிறமாயும், ஸுமங்க³ல​: = மிகவும் மங்களகரமாயுமுள்ள, அஸௌ = நமக்கெதிரில் நேரே தோன்றும் சூரியனாக விளங்குகின்றார்.

அந்த வர்ணமே இங்கும் குறிப்பதாகக் கொள்க. இதன் வெகுதூரம் பரவுவதான தன்மையே தூரப்ரசாரம் என்று குறிக்கப்படுகிறது. ஜ்யோதிமயமான பரப்ரம்மத்தின் தேஜஸ் எல்லாவற்றிலும் இருப்பதை உணர்த்துவதாக தெரிகிறது .

அப்படிப்பட்ட காந்தியுடைய மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

5. ஸிந்து⁴ராஜ அதி-தீ⁴ரம்ʼ :-

சமுத்திரத்தை விட அதிக தீரனானவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

சிந்துராஜன் என்றால் கடலரசன் என்று பொருள். பெரிய சமுத்திரம் என்று கொள்ள வேண்டியது . சமுத்திரத்தில் அநேக அலைகள் தோன்றி , பரவி, மறையும். அதனால் அதன் அளவில் மாறற்றம் தெரிவதில்லை . அதில் எத
அதேபோல் சிருஷ்ட்யாதி தொழில்களை ஈச்வரர் செய்தாலும் அதனால் தான் எத்தகைய மாற்றத்தையும் அடைவதில்லை.
தீரன் என்றால் நிறைய சலிப்பிக்கக்கூடிய சந்தர்ப சூழ்நிலைகளிலும் சலிக்காதவன் என்றும் , ஸுக துக்கங்களை ஸமமாக பாவிப்பவன் என்றும் பொருள். சமுத்திரன் தீரனைப் போல் இருக்கிறது. ஈச்வரரோ சமுத்திரத்தைக்க காட்டிலும் பெரிய தீரராக இருக்கிறார் . ஏனெனில் உலகில் எல்லா செயல்பாடுகளுக்கும் தானே காரணமாய் இருந்தபோதிலும் , தான் எதிலும் பற்றில்லாமல் நிர்விகாரமாய், நிச்சலமாய், நிரஹங்காரத்துடன் இருக்கிறாரே., யாரால் இயலும் !?!

அப்படிப்பட்ட தீரரான மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே ( மார்க³ப³ந்து⁴ம் ) :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||

No comments:

Post a Comment