Friday, 13 April 2018

Sri Margabandhu Stotram - Sloka 3

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

नित्यं चिदानन्दरूपं 
निह्नुताशेषलोकेशवैरिप्रतापम् ।
कार्तस्वरागेन्द्रचापं कृत्तिवासं
भजे दिव्यसन्मार्गबन्धुम् ॥ ३ ॥

நித்யம்ʼ சிதா³னந்த³ரூபம்ʼ
நிஹ்னுதாஶேஷலோகேஶவைரிப்ரதாபம் |
கார்தஸ்வராகே³ந்த்³ரசாபம்ʼ க்ருʼத்திவாஸம்ʼ
ப⁴ஜே தி³வ்யஸன்மார்க³ப³ந்து⁴ம் || 3 ||

nityaṃ cidānandarūpaṃ
nihnutāśeṣalokeśavairipratāpam ।
kārtasvarāgendracāpaṃ kṛttivāsaṃ
bhaje divyasanmārgabandhum ॥ 3 ॥

பிரதி பத அர்த்தம் :

नित्यं चित्-आनन्द-रूपं - நித்யம்ʼ சித்-ஆனந்த³-ரூபம்ʼ - நிலைத்த ஞான அனுபவமே வடிவாய் இருக்கின்றவரை,

लोकेश-वैरि - லோகேஶ-வைரி - லோகேச்வரனின் ( ஜீவாத்மா ) எதிரிகளின்

प्रतापम् - ப்ரதாபம் - கொட்டத்தை

अशेष - அஶேஷ - மிச்சமில்லாமல்

निह्नुत - நிஹ்னுத - ஒழித்துவிட்டவரை,

कार्तस्वर - கார்தஸ்வர - பொன்னாலான

अग-इन्द्र - அக³-இந்த்³ர - மலையரசனை ( மேரு மலை )

चापं - சாபம்ʼ - வில்லாக உடையவரை,

कृत्तिवासं - க்ருʼத்திவாஸம்ʼ - ( புலி, யானை முதலிய ) மிருகங்களின் தோலை உடுத்தியவரை,

दिव्य - தி³வ்ய - புனிதமான

सन्मार्ग - ஸன்மார்க³ - பகவானை அடையும் வழிக்குத்

बन्धुम् - ப³ந்து⁴ம் - துணை நிற்பவரை ( மார்க்கபந்தீச்வரரை )

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.

பொருள் :

நிலைத்த ஞான அனுபவமே வடிவாய் இருக்கின்றவரை, லோகேச்வரனின் ( ஜீவாத்மா ) எதிரிகளின் கொட்டத்தை மிச்சமில்லாமல் ஒழித்துவிட்டவரை, பொன்னாலான மலையரசனை ( மேரு மலை ) வில்லாக உடையவரை, ( புலி, யானை முதலிய ) மிருகங்களின் தோலை உடுத்தியவரை, பகவானை அடையும் புனிதமான வழிக்குத் துணை நிற்பவரை மார்க்கபந்தீச்வரரை வழிபடுகிறேன். 3

Meaning :

I worship Lord Margabandhu who is eternal, of the form of consciousness and bliss, who curbed the pride of Ravana, who used Meru the golden mountain as a bow, who wears the bark of a tree and skins and who is a companion to those who choose to tread the spiritual path leading to liberation. 3

பதம் பிரிப்பு :

नित्यं चित्-आनन्द-रूपं
निह्नुत अशेष लोकेश-वैरि प्रतापम् ।
कार्तस्वर अग-इन्द्र चापं कृत्तिवासं
भजे दिव्य सन्मार्ग बन्धुम् ॥ ३ ॥

நித்யம்ʼ சித்-ஆனந்த³-ரூபம்ʼ
நிஹ்னுத அஶேஷ லோகேஶ-வைரி ப்ரதாபம் |
கார்தஸ்வர அக³-இந்த்³ர சாபம்ʼ க்ருʼத்திவாஸம்ʼ
ப⁴ஜே தி³வ்ய ஸன்மார்க³ ப³ந்து⁴ம் || 3 ||

விளக்கவுரை :

1. நித்யம்ʼ சித்-ஆனந்த³-ரூபம்ʼ :-

நிலைத்த ஞான அனுபவமே வடிவாய் இருக்கின்றவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

நிலைத்த ஞான அனுபவமே வடிவாய் ஈச்வரர் இருப்பதை, நித்யம் சிதானந்த ரூபம் என்று குறிப்பிடலாம் . எல்லோருக்குள்ளும் ' நான் இருக்கின்றேன் ' என்பதான உணர்வு இருக்கிறது . இதை யாரும் ஏற்படுத்திவிடவில்லை. நேற்று உண்டாகி நாளை இல்லாமல் போவதில்லை. எல்லாக் காலங்களிலும் இருப்பது எனவே நித்யம் எனப்படுகிறது . அது ஸ்வயமே அறிவு, ஒன்றே ஆனது. ஜடத்தன்மை என்று சொல்லமுடியாதது. யாரும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. எனவே அதை சித் என்கிறோம். அது ஒரு அனுபவம் . நிறைவான அனுபவம். யாதொன்றும் தேவையற்ற நிலை, சுகம் துக்கம் முதலானவைகளால் பாதிக்கப்பாத ஆனந்த ஸ்வரூபம்.

இவையெல்லாம் சேர்ந்து ஈச்வரர், ஆத்ம ஸ்வரூபமாய் விளங்குகிறார் என்பதைக் காட்டுகிறது .

அவ்வாறு ஆத்மவடிவாய் விளங்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. நிஹ்னுத அஶேஷ லோகேஶ-வைரி ப்ரதாபம் :-

லோகேச்வரனின் ( ஜீவாத்மா ) எதிரிகளின் கொட்டத்தை மிச்சமில்லாமல் ஒழித்துவிட்டவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

இங்கு லோகேச்வரன் என்பது இந்திரனைக் குறிக்கிறது. ராவணன் முதலான பல அசுரர்களால் இந்திரனுக்கு ஏற்பட்ட இன்னல்கள் ஈச்வரரால் தீர்த்து வைக்கப்பட்டன.

இங்கு லோகேசன் என்பதை மாயாமயமான இந்த உலக வாழ்க்கையை வாழும் மனிதனாகக் ( ஜீவாத்மா ) கொண்டால், அவனது உண்மையான எதிரிகளான காமம் , குரோதம் முதலானவைகளை, அதன் தாக்கங்களை, அதாவது அஞ்ஞானத்தை முற்றிலும் ஒழித்து ஞானத்தை பிரகாசிக்கச் செய்பவர் என்று பொருள்படுகிறது.

அப்படி எதிரிகளை முற்றிலும் ஒழிக்கின்ற மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

3. கார்தஸ்வர அக³-இந்த்³ர சாபம்ʼ :-

பொன்னாலான மலையரசனை ( மேரு மலை ) வில்லாக உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தாரகாசுரனின் மூன்று மகன்களும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ) நான்முகனை நோக்கி தவமியற்றி அம்மூவரும் பொன், வெள்ளி, இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும். அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர். நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் பலத்தால் அனைவருக்கும் தொல்லை கொடுக்க, தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல் சிவபெருமானிடம் முறையிட, உடன் சிவபெருமான், பிரம்மா சாரதியாக, பூமியே தேராக, தேரில் மந்திர மலையை அச்சாகவும், சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேரில் சிவபெருமான் இருந்து, அனைவரின் எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை நாணாகக் கொண்டு, விஷ்ணுவை அம்பாகக் கொண்டு நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும் பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார். முப்புறங்களும் எரிந்து சாம்பலாயின. உடன் அசுரர்கள் மூவரும் சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க, அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார்.

தத்துவரீதியாக முப்புரங்கள் என்பன, ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரண சரீரங்கள் என்று கொள்ளப்படுகிறது. அவைகளைத் தன் புன்னகையால் அதாவது கிருபையால் , ஒழித்து, நம்மைத் தன் சேவகர்களாக ஏற்றுக் கொள்கிறார்.

அப்படி ஏற்றுக்கொள்ளும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. க்ருʼத்திவாஸம்ʼ :-

( புலி, யானை முதலிய ) மிருகங்களின் தோலை உடுத்தியவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களை சிவபெருமான் சோதித்தார். இதனை ஞானதிருஷ்டியில் கண்ட முனிவர்கள் வேள்வியால் சிவபெருமானை அழிக்கமுடிவு செய்தனர். எனவே பிறர்க்கு தீங்கு செய்யக்கூடிய அபிசார ஹோமம் வார்த்தனர். அதிலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி வந்தது. அதனைக் கொண்டு சிவபெருமானிடம் ஏவினர். அதனை அடக்கிய சிவபெருமான் அதனைக் கொன்று தோலினை ஆடையாக்கினார்.

பின் ஒரு யானையையும் அனுப்ப, அதன் தோலையும் உரித்து அணிந்தார்.

இவ்வாறு மிருகங்களின் தோலை ஆடையாக அணிந்ததால் 'க்ருத்திவாஸர்' எனப்படுகிறார். இதனால் ஈச்வரர் எப்படிப்பட்ட எதிரியையும் எளிதில் அழித்துவிடுபவர் என்றும் , எந்த வர்ணாச்ரமத்திலும் சேராத அதிவர்ணாச்ரமி என்றும் தெரிகிறது.

அத்தகைய மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

5. தி³வ்ய ஸன்மார்க³ ப³ந்து⁴ம் :-

புனிதமான பகவானை அடையும் வழிக்குத் துணை நிற்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

ஸத் வஸ்துவை அடைவதற்கானவழி தான் ஸன்மார்கம். ஒருவன் பகவானை அடையும் முயற்சியில் ஈடுபடும் போது , மாயை அவனது உறுதியை சோதிக்க வேண்டியவற்றை செய்யும். அதாவது வழிபிறழச் செய்யும். அதற்கு அனேக ஸுக போகங்களை அளிக்கும் , ஸித்திகளை அளிக்கும் . சிலசமயம் மேலும் மேலும் கஷ்டங்களையும் கொடுத்துப் பார்க்கும். அச்சமயங்களில் ஒருவன் வழிபிறழாமல் இருக்க , பகவத் கிருபை/ குரு கிருபை வேண்டும். ஈச்வரர் அத்தகைய கிருபை செய்து ஜீவனுக்கு வழித்துணையாக இருந்து, தன்னை அடையச் செய்கிறார்.

அப்படித் துணையிருக்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே ( மார்க³ப³ந்து⁴ம் ) :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||

No comments:

Post a Comment