Friday, 13 April 2018

Sri Margabandhu Stotram - Sloka 4

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

कन्दर्पदर्पघ्नमीशं
कालकण्ठं महेशं महाव्योमकेशम् ।
कुन्दाभदन्तं सुरेशं
कोटिसूर्यप्रकाशं भजे मार्गबन्धुम् ॥ ४ ॥

கந்த³ர்பத³ர்பக்⁴னமீஶம்ʼ
காலகண்ட²ம்ʼ மஹேஶம்ʼ மஹாவ்யோமகேஶம் |
குந்தா³ப⁴த³ந்தம்ʼ ஸுரேஶம்ʼ
கோடிஸூர்யப்ரகாஶம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் || 4 ||

kandarpadarpaghnamīśaṃ
kālakaṇṭhaṃ maheśaṃ mahāvyomakeśam ।
kundābhadantaṃ sureśaṃ
koṭisūryaprakāśaṃ bhaje mārgabandhum ॥ 4 ॥

பிரதி பத அர்த்தம் :

कन्दर्प - கந்த³ர்ப - மன்மதனின்

दर्पघ्नं - த³ர்பக்⁴னம்ʼ - கர்வத்தை அழித்தவரை

ईशं - ஈஶம்ʼ - அனைத்தையும் ஆள்பவரை

कालकण्ठं - காலகண்ட²ம்ʼ - கறுப்பு நிறமான கழுத்தை உடையவரை,

महेशं - மஹேஶம்ʼ - ஆள்பவர்க்கெல்லாம் மேலான ஆள்பவரை

महा व्योम केशं - மஹா வ்யோம கேஶம் - பெரிய ஆகாயம் போன்ற கேசத்தை உடையவரை

कुन्दाभ - குந்தா³ப⁴ - மல்லிகைப்பூவை ஒத்த

दन्तं - த³ந்தம்ʼ - பற்களைக் கொண்டவரை

सुरेशं - ஸுரேஶம்ʼ - தேவர்களை ஆள்பவரை

कोटिसूर्य - கோடிஸூர்ய - கோடி ஸூர்ய

प्रकाशं - ப்ரகாஶம்ʼ - ப்ரகாசத்திற்கு இணையாக ஒளிர்பவரை

मार्गबन्धुं - மார்க³ப³ந்து⁴ம் - மார்கபந்துவை

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.

பொருள் :

மன்மதனின் கர்வத்தை அழித்தவரை, அனைத்தையும் ஆள்பவரை, கறுப்பு நிறமான கழுத்தை உடையவரை, ஆள்பவர்க்கெல்லாம் மேலான ஆள்பவரை, பெரிய ஆகாயம் போன்ற கேசத்தை உடையவரை, மல்லிகைப்பூவின் வெண்மையை ஒத்த நிறமுடைய பற்களைக் கொண்டவரை, தேவர்களை ஆள்பவரை, கோடி ஸூர்ய ப்ரகாசத்திற்கு இணையாக ஒளிர்பவரை, மார்க்கபந்தீச்வரரை வழிபடுகிறேன். 4

Meaning :-

I worship Lord Margabandhu who removed Manmatha's pride, who has kept poison in His neck, the great Lord who is more extensive than the space, whose teeth have the sheen of the jasmine flower, who is the Lord of the gods and who shines like millions of suns. 4

பதம் பிரிப்பு :

कन्दर्प-दर्पघ्नं ईशं
कालकण्ठं महा-ईशं महा-व्योम केशम् ।
कुन्द-आभ-दन्तं सुर-ईशं
कोटि-सूर्य प्रकाशं भजे मार्गबन्धुम् ॥ ४ ॥

கந்த³ர்ப-த³ர்பக்⁴னம்ʼ ஈஶம்ʼ
காலகண்ட²ம்ʼ மஹா-ஈஶம்ʼ மஹா-வ்யோம கேஶம் |
குந்த³-ஆப⁴-த³ந்தம்ʼ ஸுர-ஈஶம்ʼ
கோடி-ஸூர்ய ப்ரகாஶம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் || 4 ||

விளக்கவுரை :

1. கந்த³ர்ப-த³ர்பக்⁴னம்ʼ :-

மன்மதனின் கர்வத்தை அழித்தவரை / திருத்தியவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

காமத்தால் பீடிக்கப்படாதவர்களே இல்லை என்று கர்வம் கொண்டிருந்தானாம் மன்மதன். ஆனால் சமாதியிலிருந்த அதாவது தன் ஸ்வரூப ஆனந்தத்திலிருந்த ஈச்வரரை பாதிக்காமல், காமதஹனமே ஏற்பட்டுவிட்டது. அதாவது தன் ஸ்வரூப ஆனந்தத்தில் நிலைபெற்றவர்களை, உலகியல் சார்ந்த ஆசைகள் , இன்பத்திற்கான வேட்கைகள் எந்த பாதிப்பும் ஏற்டுவதில்லை என்பது தெளிவு.

தன் அடியார்களையும் தன்னைப் போல் திருத்திடும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. ஈஶம்ʼ :-

அனைத்தையும் ஆள்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தான் படைத்த அனைத்திலும் தானே அந்தர்யாமியாய் இருந்து ஆட்சி செலுத்துபவரை மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

3. காலகண்ட²ம்ʼ :-

கருநீல / கறுப்பு நிறமான கழுத்தை ( தொண்டையை ) உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தேவர்களும் அஸுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது ஆதியில் தோன்றிய விஷம் வெளிவர, அதைக்கண்ட அனைவரும் பீதியடைந்து பயந்து ஓட, அவர்களின் மீது உண்டான கருணையின் காரணமாக, " பயப்படாதீர்கள் " என்று கூறி அந்த விஷத்தைத் தான் எடுத்துப் பருகிட, அந்த விஷம் உதரத்தினுள் செல்லாதிருக்க வேண்டி , உமாதேவி தன் கரத்தால் ஈசனின் கழுத்தைப் பிடிக்க, விஷம் தொண்டையிலேயே நின்று அதன் காரணமாக கழுத்து கருநீலநிறமாக மாறியதால் காலகண்டர் என்ற பெயர் ஏற்பட்டது.

அப்படிப்பட்ட கருணாமூர்த்தியான மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. மஹா-ஈஶம்ʼ :-

ஆள்பவர்க்கெல்லாம் மேலான ஆள்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

ஒரு பெரும் நிறுவனத்தை நிறுவியவர், பலதரப்பட்ட வேலைகள்நடக்கவேண்டி பல வேலையாட்களை நியமிக்கிறார், தானே நேரடியாக எல்லா வேலைகளையும் செய்வதில்லை . ஆனால் அவர் ஆணைப்படி தான் நடக்கிறது . அதேபோல் இந்திரன் , வருணன், அக்னிதேவன் முதலான பலரை பல செயல்களுக்காக வேண்டி ஈச்வரர் நியமிக்கிறார். ஆனால் அவர்களையும் ஆள்பவராகவம், தனக்கு மேல் ஆள்பவர் யாரும் இல்லாதவர் என்பதாலும் மஹேசர் எனப்படுகிறார் .

அப்படி அனைத்திற்கும் மேலான ஆள்பவரை மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

5. மஹா-வ்யோம கேஶம் :-

பெரிய அல்லது சிறந்த ஆகாயம் போன்ற கேசத்தை உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வரும்போது , அதன் வேகத்தைத் தாங்க, தன் அகன்று விரிந்த ஜடை தலையைக் காட்டினார். அப்போது முடியப்பட்டிருந்த ஜடை அவிழ்ந்தநிலையில் இருந்தது. அப்போது அந்த கேசங்கள் அலையலையாக ஆகாயம் போன்று விரிந்திருந்தது. எனவே மஹா வ்யோம கேசர் எனப்படுகிறார்
மேலும் ஆகாயத்திலிருந்து மழை பெய்யும், ஓயும். ஆனால் ஓயாது ஓடும் கங்கையைத் தந்ததால் மஹா வ்யோம கேசர் என்றும் கொள்ளலாம் . மஹத் - பெரிய / சிறந்த

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

6. குந்த³-ஆப⁴-த³ந்தம்ʼ :-

மல்லிகைப்பூவின் வெண்மையை ஒத்த நிறமுடைய பற்களைக் கொண்டவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )


வேதங்கள், பகவந்நாமம் இவைகளை ஓதுபவர்களின் வாயில் அமைந்துள்ள பற்களே பெருமைக்குரியது என்றால் , வேதநாயகனின் பற்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ.

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

7. ஸுர-ஈஶம்ʼ :-

இந்திரன் முதலான தேவர்களை ஆள்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தனக்கு சமமாக யாரும் இல்லாதவர்.

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

8. கோடி-ஸூர்ய ப்ரகாஶம்ʼ :-

கோடி ஸூர்ய ப்ரகாசத்திற்கு இணையாக ஒளிர்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

ஒரு ஸூர்யனுடைய ப்ரகாசத்தையே நம் கண்கொண்டு காண இயலாது . கோடி ஸூர்யர்களின் ஒளியை நினைக்கவே முடியாது . மேலும் இங்கு கோடி என்றால் எண்ணற்ற என்றே கொள்வது உசிதம். இன்னும் விசாரம் செய்தால் கோடி ஸூர்யர்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் அதைக் காண்பவனது கண்ணில் உள்ள ஒளியினால் மட்டுமே காணமுடியும். அதுவே ஆத்மஜ்யோதி.

அந்த பரஞ்சோதி ஆனவரை மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||

No comments:

Post a Comment