Friday, 13 April 2018

Sri Margabandhu Stotram - Sloka 6 ( PHALAŚRUTI )

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

फलश्रुतिः :-

अप्पय्ययज्वेन्द्र गीतं स्तोत्रराजं पठेद्यस्तु भक्त्या प्रयाणे ।
तस्यार्थसिद्धिं विधत्ते मार्गमध्येऽभयं चाशुतोषो महेशः ॥ ६ ॥

ப²லஶ்ருதி​: :-

அப்பய்யயஜ்வேந்த்³ர கீ³தம்ʼ ஸ்தோத்ரராஜம்ʼ படே²த்³யஸ்து ப⁴க்த்யா ப்ரயாணே |
தஸ்யார்த²ஸித்³தி⁴ம்ʼ வித⁴த்தே மார்க³மத்⁴யே(அ)ப⁴யம்ʼ சாஶுதோஷோ மஹேஶ​: || 6 ||

PHALAŚRUTIḤ :-

appayyayajvendra gītaṃ stotrarājaṃ paṭhedyastu bhaktyā prayāṇe ।
tasyārthasiddhiṃ vidhatte mārgamadhye'bhayaṃ cāśutoṣo maheśaḥ ॥ 6 ॥

பிரதி பத அர்த்தம் :

यः - ய​: - யார் ஒருவர் ,

अप्पय्य-यज्वेन्द्र - அப்பய்ய-யஜ்வேந்த்³ர - சிறந்த யஜ்ஞங்களை செய்து வைப்பவரான அப்பய்ய தீக்ஷிதர் அவர்களால்,

गीतं - கீ³தம்ʼ - மொழியப்பெற்ற கீதமான ,

स्तोत्र-राजं - ஸ்தோத்ர-ராஜம்ʼ - சிறந்த ஸ்தோத்ரத்தை,

भक्त्या तु - ப⁴க்த்யா து - பக்தியுடன்,

प्रयाणे - ப்ரயாணே - பயணத்தின்போது,

पठेत् - படே²த் - படிக்கின்றாரோ,

तस्य - தஸ்ய - அவரிடத்தில்,

आशुतोषः महेशः - ஆஶுதோஷ​: மஹேஶ​: - எளிதில் திருப்தியடையும் மஹேசர்,

अर्थ-सिद्धिं - அர்த²-ஸித்³தி⁴ம்ʼ - வேண்டுவனவற்றையும் ,

मार्गमध्ये - மார்க³மத்⁴யே - செல்லும் வழியில்,

अभयं च - அப⁴யம்ʼ ச - அபயத்தையும் ,

विधत्ते - வித⁴த்தே - அடைவிக்கிறார்.

பொருள் :

சிறந்த யஜ்ஞங்களை செய்து வைப்பவரான அப்பய்ய தீக்ஷிதர் அவர்களால், மொழியப்பெற்ற கீதமான இந்த சிறந்த ஸ்தோத்ரத்தை, யார் ஒருவர் பயணத்தின்போது பக்தியுடன் படிக்கின்றாரோ, அவரிடத்தில் எளிதில் திருப்தியடையும் மஹேசர், அவனுக்கு வேண்டுவனவற்றை அடைவிக்கிறார். மேலும் செல்லும் வழியில், ( வாழும் வாழ்க்கையில் ) அபயத்தையும் ( பயமற்ற நிலை ) அளிக்கிறார். 6

Meaning :

One who reads the poem with devotion during a journey will be successful and attain his goal or wishes. In addition he will feel secure and be protected by the Lord on the way. 6

பதம் பிரிப்பு :

अप्पय्य-यज्वेन्द्र गीतं स्तोत्रराजं पठेत् यः तु भक्त्या प्रयाणे ।
तस्य अर्थसिद्धिं विधत्ते मार्गमध्ये अभयं च आशुतोषः महेशः ॥ ६ ॥

அப்பய்ய-யஜ்வேந்த்³ர கீ³தம்ʼ ஸ்தோத்ரராஜம்ʼ படே²த் ய​: து ப⁴க்த்யா ப்ரயாணே |
தஸ்ய அர்த²ஸித்³தி⁴ம்ʼ வித⁴த்தே மார்க³மத்⁴யே அப⁴யம்ʼ ச ஆஶுதோஷ​: மஹேஶ​: || 6 ||

appayya-yajvendra gītaṃ stotrarājaṃ paṭhet yaḥ tu bhaktyā prayāṇe ।
tasya arthasiddhiṃ vidhatte mārgamadhye abhayaṃ ca āśutoṣaḥ maheśaḥ ॥ 6 ॥

விளக்கவுரை :

அப்பய்ய தீக்ஷிதர் என்பார் அனேகவிதமான யஜ்ஞங்களை நடத்தியிருக்கிறார். யஜ்ஞ பலன்கள் கிடைப்பது உண்மையே என்று நிரூபித்தும் காட்டியிருக்கிறார். ஆகவே யஜ்வேந்திரர் என்று கூறுவது உசிதம் தான். மார்கபந்தீச்வரர் மேல் பாடப்பட்டுள்ள இந்த சிறந்த கருத்துகள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை யாரொருவர் , பக்தியுடன் பாராயணம் பண்ணுகிறார்களோ, அவர்களுக்கு வழித்துணையாகயிருந்து அவர்கள் வேண்டியவற்றை இடையூறுகளின்றி நிறைவேற்றித் தருகிறார். ரோகம், பகைமை, அதர்மம், வறுமை, களவு, அரசு, முதுமை, மரண பயம், நரக பயம், ஸம்ஸார பயம், அஞ்ஞான பயம் முதலான ஸகலவித பயங்களிலிருந்தும், அபயம் அளித்து ரக்ஷிக்கிறார். அதுவும் இந்த ஐந்தே ச்லோகங்களில். எனவே தான் ஆசுதோஷர் - எளிதில் திருப்தி அடைபவர் என்று அழைக்கப்படுகிறார் போலும்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||

No comments:

Post a Comment