Sri Rudraashtakam - Sloka 7
॥ श्री रुद्राष्टकम् ॥
|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||
|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||
न यावदुमानाथपादारविन्दं भजन्तीह लोके परे वा नराणाम् ।
न तावत्सुखं शान्ति सन्तापनाशः प्रसीद प्रभो सर्वभूताधिवास ॥ ७॥
ந யாவது³மானாத²பாதா³ரவிந்த³ம்ʼ ப⁴ஜந்தீஹ லோகே பரே வா நராணாம் ।
ந தாவத்ஸுக²ம்ʼ ஶாந்தி ஸந்தாபனாஶ꞉ ப்ரஸீத³ ப்ரபோ⁴ ஸர்வபூ⁴தாதி⁴வாஸ ॥ 7॥
na yāvadumānāthapādāravindaṃ bhajantīha loke pare vā narāṇām ।
na tāvatsukhaṃ śānti santāpanāśaḥ prasīda prabho sarvabhūtādhivāsa ॥ 7॥
यावत् - யாவத் - எதுவரை,
उमानाथ-पाद-अरविन्दं - உமானாத²-பாத³-அரவிந்த³ம்ʼ - உமாநாதருடைய ( சிவபெருமானுடைய ) பாத கமலங்களை,
न भजन्ति - ந ப⁴ஜந்தி - பஜிக்கவில்லையோ, *
तावत् - தாவத் - அதுவரை,
नराणां - நராணாம்ʼ - நரர்களுக்கு,
इह लोके परे वा - இஹ லோகே பரே வா - இவ்வுலகிலோ பர உலகிலோ,
न सुखं शान्तिः सन्तापनाशः - ந ஸுக²ம்ʼ ஶாந்தி꞉ ஸந்தாபனாஶ꞉: - சுகம், அமைதி, தவிப்பிலிருந்து விடுதலை கிடைக்காது., #
प्रभो - ப்ரபோ⁴ - ஹே எம்பெருமானே !
सर्वभूताधिवास - ஸர்வபூ⁴தாதி⁴வாஸ - ஹே எங்கும் நீக்கமற நிறைந்தவரே !
प्रसीद - ப்ரஸீத³ - அருளுங்கள்.
பொருள் :
எதுவரை உமாநாதருடைய ( சிவபெருமானுடைய ) பாத கமலங்களை, பஜிக்கவில்லையோ ( பக்தி செய்யவில்லையோ ), அதுவரை நரர்களுக்கு ( மனிதர்களுக்கு ) இவ்வுலகிலோ பரவுலகிலோ, சுகம், அமைதி, தவிப்பிலிருந்து விடுதலை கிடைக்காது., ஹே எம்பெருமானே ! ஹே எங்கும் நீக்கமற நிறைந்தவரே ! அருளுங்கள் (பிரீதி அடையுங்கள்). 7
Meaning :
7.1: (Salutations to Sri Rudra) As Long as the Lotus Feet of the Lord of Uma ...
7.2: ... is not Worshipped in This World or Later by the Human Beings, ...
7.3: ... So Long (i.e. Till then) Joy, Peace and End of Sorrows will not be experienced in life.
7.4: Therefore O Lord, Please be Gracious, You Who Reside within All Beings.
* பஜிக்க - அன்பு செலுத்த, வழிபட, பூஜிக்க, தொண்டு செய்ய.,
# சுகம் - அளவான இன்பம். ஒருவருக்கு சுகம் என்பது மற்றவர்களுக்கு துக்கமாக அமையலாம்; சாந்தி - அமைதி / நிறைவு. ஞானத்தினால் தான் ஏற்படக்கூடியது; ஸந்தாப நாசம் - தொல்லை தவிப்பு துக்கம் நீங்குவதால் ஏற்படுகிற சுகம்.
பாட பேதம் --
न तावत्सुखं शान्ति सन्तापनाशं प्रसीद प्रभो सर्वभूताधिवासम् ॥ ७॥
ந தாவத்ஸுக²ம் ஶாந்தி ஸந்தாபநாஶம் ப்ரஸீத³ ப்ரபோ⁴ ஸர்வபூ⁴தாதி⁴வாஸம் ॥ 7॥
No comments:
Post a Comment