Sri Rudraashtakam - Sloka 5
॥ श्री रुद्राष्टकम् ॥
|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||
|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||
प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशं अखण्डं भजे भानुकोटिप्रकाशम् । #
त्रयः शूल निर्मूलनं शूलपाणिं भजेऽहं भवानीपतिं भावगम्यम् ॥ ५॥ *
ப்ரசண்ட³ம் ப்ரக்ருʼஷ்டம் ப்ரக³ல்ப⁴ம் பரேஶம் அக²ண்ட³ம் ப⁴ஜே பா⁴நுகோடிப்ரகாஶம் ।
த்ரய: ஶூல நிர்மூலநம் ஶூலபாணிம் ப⁴ஜேঽஹம் ப⁴வாநீபதிம் பா⁴வக³ம்யம் ॥ 5॥
pracaṇḍaṃ prakṛṣṭaṃ pragalbhaṃ pareśaṃ akhaṇḍaṃ bhaje bhānukoṭiprakāśam ।
trayaḥ śūla nirmūlanaṃ śūlapāṇiṃ bhaje'haṃ bhavānīpatiṃ bhāvagamyam ॥ 5॥
प्रचण्डं - ப்ரசண்ட³ம்ʼ - ஆற்றல்மிக்கவரை,
प्रकृष्टं - ப்ரக்ருʼஷ்டம்ʼ - அனைத்திலும் சிறந்தவரை,
प्रगल्भं - ப்ரக³ல்ப⁴ம்ʼ - யாராலும் எதிர்க்க முடியாதவரை,
परेशं - பரேஶம்ʼ - பரமேச்வரரை,
अखण्डं - அக²ண்ட³ம்ʼ - நீக்கமற நிறைந்தவரை,
भानु-कोटि-प्रकाशं - பா⁴னு-கோடி-ப்ரகாஶம்ʼ - கோடி சூரியரைப்போல பிரகாசிப்பவரை,
त्रयः शूल निर्मूलनं - த்ரய꞉: ஶூல நிர்மூலனம்ʼ - மூன்றுவிதமான துக்கங்களை வேரறுப்பவரை,
शूलपाणिं - ஶூலபாணிம்ʼ - கையில் சூலம் ஏந்தியவரை,
भावगम्यं - பா⁴வக³ம்யம்ʼ - ( பக்தி ) பாவத்தால் எளிதில் அடையப்படக்கூடியவரை,
भवानीपतिं - ப⁴வானீபதிம்ʼ - மங்களங்கள் அருளும் அன்னை பவானிக்குப் பதியானவரை,
भजे-अहम् भजे (अहम्) - ப⁴ஜே-அஹம் ப⁴ஜே (அஹம்) - நான் தொழுகிறேன், நான் தொழுகிறேன்.
பொருள் :
ஆற்றல்மிக்கவரை, அனைத்திலும் சிறந்தவரை, யாராலும் எதிர்க்க முடியாதவரும், பரமேச்வரரும், நீக்கமற நிறைந்தவரும், கோடிசூரியரைப் போலப் பிரகாசிப்பவரும், மூன்றுவிதமான துக்கங்களை வேரறுப்பவரும், கையில் சூலம் ஏந்தியவரும், ( பக்தி ) பாவத்தால் எளிதில் அடையப்படக்கூடியவருமான மங்களங்கள் அருளும் அன்னை பவானீபதியை ( சிவபெருமான் ) நான் தொழுகிறேன், நான் தொழுகிறேன். 5
Meaning :
5.1: (Salutations to Sri Rudra) Who is Terrible, Eminent and extremely Strong; Who is the Highest Lord,
5.2: Who is ever Unborn and Whole; and with the Effulgence of Million Suns,
5.3: Who has a Trident in Hand, the Three Spikes of which Uproots the bondages of the Three Gunas (Tamas, Rajas and Sattva),
5.4: I Worship the Consort of Devi Bhavani Who can be Attainedonly by Devotion.
மூன்றுவிதமான துக்கங்கள் :
ஆத்⁴யாத்மிகம் - உடலிலோ மனதிலோ தானே ஏற்படுவது.
ஆதி⁴பௌ⁴திகம் - வெளிக் காரணங்களால் ஏற்படுவது
ஆதி⁴தை³விகம் - இடி, மின்னல், பூகம்பம் போன்ற மனிதனுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் உண்டாவது.
பாட பேதம் -
# अजं - அஜம் - ajaṃ - பிறப்பற்றவர்.
* त्रयीशूल - த்ரயீஶூல - trayīśūla - மூன்றுவித துக்கங்கள்.
No comments:
Post a Comment