Sri Rudraashtakam - Sloka 4
॥ श्री रुद्राष्टकम् ॥
|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||
|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||
चलत्कुण्डलं शुभ्रनेत्रं विशालं प्रसन्नाननं नीलकण्ठं दयालुम् ।
मृगाधीशचर्माम्बरं मुण्डमालं प्रियं शंकरं सर्वनाथं भजामि ॥ ४॥
சலத்குண்ட³லம் ஶுப்⁴ரநேத்ரம் விஶாலம் ப்ரஸந்நாநநம் நீலகண்ட²ம் த³யாலும் ।
ம்ருʼகா³தீ⁴ஶசர்மாம்ப³ரம் முண்ட³மாலம் ப்ரியம் ஶங்கரம் ஸர்வநாத²ம் ப⁴ஜாமி ॥ 4॥
calatkuṇḍalaṃ śubhranetraṃ viśālaṃ prasannānanaṃ nīlakaṇṭhaṃ dayālum ।
mṛgādhīśacarmāmbaraṃ muṇḍamālaṃ priyaṃ śaṃkaraṃ sarvanāthaṃ bhajāmi ॥ 4॥
चलत्-कुण्डलं - சலத்-குண்ட³லம்ʼ - காதில் அசையும் குண்டலங்களை,
शुभ्र-नेत्रं विशालं - ஶுப்⁴ர-நேத்ரம்ʼ விஶாலம்ʼ - பிரகாசிக்கிற விசாலமான கண்களை,
प्रसन्न-आननं - ப்ரஸன்ன-ஆனநம்ʼ - ஆனந்தம் ததும்பும் முகத்தை,
नीलकण्ठं - நீலகண்ட²ம்ʼ - ( ஹாலாஹல விஷத்தை உண்ட ) நீலகண்டரை,
दयालुं - த³யாலும்ʼ - கருணை நிறைந்தவரை,
मृगाधीश चर्म-अम्बरं - ம்ருʼகா³தீ⁴ஶ சர்ம-அம்ப³ரம்ʼ - புலித்தோலை ஆடையாக உடுத்தியவரை,
मुण्डमालं - முண்ட³மாலம்ʼ - கபாலமாலையை அணிந்தவரை,
सर्वनाथं - ஸர்வநாத²ம்ʼ - அனைத்திற்கும் அதிபதியை,
प्रियं - ப்ரியம்ʼ - அனைவரிடமும் பிரியம் கொண்டவரை,
शंकरं - ஶங்கரம்ʼ - சங்கரரை ( மங்களங்கள் செய்பவரை )
भजामि - ப⁴ஜாமி - ( நான் ) தொழுகிறேன்.
பொருள் :
காதில் அசையும் குண்டலங்களையும், பிரகாசிக்கிற விசாலமான கண்களையும், ஆனந்தம் ததும்பும் முகத்தையும் கொண்ட ( ஹாலாஹல விஷத்தை உண்ட ) நீலகண்டரும், கருணை நிறைந்தவரும், புலித்தோலை ஆடையாக உடுத்தியவரும், கபாலமாலையை அணிந்தவரும், அனைத்திற்கும் அதிபதியும், அனைவரிடமும் பிரியம் கொண்டவருமான சங்கரரை ( மங்களங்கள் செய்பவரை ) (நான்) தொழுகிறேன். 4
Meaning :
4.1: (Salutations to Sri Rudra) Whose Ear-Rings Sway near His beautiful face, which is adorned with Wide shining eyes,
4.2: Whose Face is beaming with Joy and Grace, Whose Throat is Blue (due to drinking the poison during samudra manthana) and Who is extremely Compassionate,
4.3: Whose Clothes are the Skin of the Lord of Animals(signifying Tiger) and Whose neck is adorned with a Garland of Skulls,
4.4: I Worship Him Who is Beloved of His Devotees, Who is Shankara (another name of Sri Shiva) and Who is the Lord of All.
பாடபேதம் -
भ्रू सुनेत्रं - ப்⁴ரூ ஸுநேத்ரம் - bhrū sunetraṃ - நீண்ட புருவங்களுடன் கூடிய கண்கள். with a striking Eyebrow and Large Beautiful Eyes.
No comments:
Post a Comment