Sri Rudraashtakam - Sloka 1
॥ श्री रुद्राष्टकम् ॥
|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||
|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||
नमामीशमीशान निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् ।
निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् ॥ १॥
நமாமீஶமீஶாந நிர்வாணரூபம் விபு⁴ம் வ்யாபகம் ப்³ரஹ்மவேத³ஸ்வரூபம் ।
நிஜம் நிர்கு³ணம் நிர்விகல்பம் நிரீஹம் சிதா³காஶமாகாஶவாஸம் ப⁴ஜேঽஹம் ॥ 1॥
namāmīśamīśāna nirvāṇarūpaṃ vibhuṃ vyāpakaṃ brahmavedasvarūpam ।
nijaṃ nirguṇaṃ nirvikalpaṃ nirīhaṃ cidākāśamākāśavāsaṃ bhaje'ham ॥ 1॥
ईशान निर्वाण-रूपं - ஈஶான நிர்வாண-ரூபம்ʼ - காணும் அனைத்தையும் ஆள்பவரை; அனைத்தின் ஸ்வரூபமாக இருப்பவரை;
विभुं - விபு⁴ம்ʼ - எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவரை,
व्यापकं - வ்யாபகம்ʼ - எங்கும் வியாபித்தவரை (வெளித் தோற்றமாக இருந்து அந்தர்யாமியை மறைப்பவரை),
ब्रह्म-वेद-स्वरूपम् - ப்³ரஹ்ம-வேத³-ஸ்வரூபம் - பரப்பிரம்மமாகவும் பிரதிபாத்யம் அதை அடையும் மார்க்கமாகிய வேதமாகவும் ( ப்ரதிபாதகம் ) இருப்பவரை
ईशं - ஈஶம்ʼ - ஈசரை
नमामि - நமாமி - வணங்குகிறேன்.
निजं - நிஜம்ʼ - கட்டுப்படாதவரை,
निर्गुणं - நிர்கு³ணம்ʼ - குணங்கள் அற்றவரை,
निर्विकल्पं - நிர்விகல்பம்ʼ - மாற்றங்கள் அடையாதவரை,
निरीहं - நிரீஹம்ʼ - அசைவற்று இருப்பவரை,
चिद् आकाशं - சித்³ ஆகாஶம்ʼ - சைதன்ய ஆகாசம் (அறிவு ஸ்வரூபம்) ஆனவரை,
आकाश-वासं - ஆகாஶ-வாஸம்ʼ - ஆகாயத்தில் வசிப்பவரை,
अहम् - அஹம் - நான்
भजे - ப⁴ஜே - பூஜிக்கிறேன்.
பொருள் :
(காணும்) அனைத்தையும் ஆள்பவரும்; (அந்த) அனைத்தின் ஸ்வரூபமாக இருப்பவரும்; அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக இருப்பவரும், எங்கும் வியாபித்தவரும் (வெளித்தோற்றமாக இருந்து அந்தர்யாமியை மறைப்பவரும்), பரப்பிரம்மமாகவும் (ப்ரதிபாத்யம்) அதை அடையும் மார்க்கமாகிய வேதமாகவும் ( ப்ரதிபாதகம் ) இருப்பவருமான ஈசரை வணங்குகிறேன்.
கட்டுப்படாதவரும் (சுதந்திரமானவரும்), குணங்கள் அற்றவரும் (முக்குணங்களின் சேர்க்கை இல்லாதவர்), மாற்றங்கள் அடையாதவரும் ( இளமை, முதுமை போன்ற மாற்றங்கள் ), அசைவற்று இருப்பவரும் ( நடத்தல் போன்ற தொழில்கள் அற்றவர் ), சைதன்ய ஆகாசம் (அறிவு ஸ்வரூபம்) ஆனவரும், ஆகாயத்தில் வசிப்பவருமான (ஈச்வரரை) நான் பூஜிக்கிறேன். 1
Meaning :
1.1: (Salutations to Sri Rudra) I Salute the Lord Ishana (another name of Sri Shiva) whose Form represents the state of the highest Nirvana (extinction of all desires and passions leading to the highest bliss),
1.2: Who Manifests taking a Form though in essence He is Pervading everywhere; and His Form embodies the Highest Knowledge of Brahman present in the core of the Vedas.
1.3: Who remain absorbed in His Own Self which is Beyond the three Gunas (Sattva, Rajas and Tamas), which is Beyond any Vikalpas (Change and Manifoldness), and which is Free from any Movement (due to desires etc),
1.4: Who Abides in the Sky of the Chidakasha (Spiritual Sky); I Worship that Ishana.
# பாடபேதம் -
अजं - அஜம் - ajam - பிறப்பற்றவர்.
No comments:
Post a Comment