Monday, 16 March 2020

Sri Rudraashtakam - Sloka 2

Sri Rudraashtakam  -  Sloka 2

॥ श्री रुद्राष्टकम‌् ॥

|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||

|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||

निराकारमोंकारमूलं तुरीयं गिरा ज्ञान गोतीतमीशं गिरीशम् ।
करालं महाकाल कालं कृपालुं गुणागार संसारपारं नतोऽहम् ॥ २॥

நிராகாரமோங்காரமூலம் துரீயம் கி³ரா ஜ்ஞாந கோ³தீதமீஶம் கி³ரீஶம் ।
கராலம் மஹாகால காலம் க்ருʼபாலும் கு³ணாகா³ர ஸம்ஸாரபாரம் நதோঽஹம் ॥ 2॥

nirākāramoṃkāramūlaṃ turīyaṃ girā jñāna gotītamīśaṃ girīśam ।
karālaṃ mahākāla kālaṃ kṛpāluṃ guṇāgāra saṃsārapāraṃ nato'ham ॥ 2॥

निराकारं  -  நிராகாரம்ʼ  -  உருவமற்றவரை,

ओङ्कार-मूलं  -  ஓங்கார-மூலம்ʼ  -  ஓங்கார த்வனியின் ஆதாரமானவரை,

तुरीयं  -  துரீயம்ʼ  -  ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளைக் கடந்த நான்காம் நிலை,

गिरा ज्ञान गो अतीतं  -  கி³ரா ஜ்ஞான கோ³ அதீதம்ʼ  -  வாக்கு, புத்தி, இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டவரை,

गिरीशं  -  கி³ரீஶம்ʼ  -  மலைகளுக்கு அதிபதியானவரை,

करालं  -  கராலம்ʼ  -  ( அதர்மத்தைக் கண்டு ) கடுமையாக நடந்துகொள்பவரை,

महाकाल कालं  -  மஹாகால காலம்ʼ  -  காலனுக்கும் காலனானவரை,

कृपालुं  -  க்ருʼபாலும்ʼ  -  கருணை நிறந்தவரை,

गुण-आगार  -  கு³ண-ஆகா³ர  -  அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமான,

संसार-पारं  -  ஸம்ʼஸார-பாரம்ʼ  -  ஸம்ஸாரமாகிற சுழலைத் தாண்டி இருப்பவரை,

ईशं  -  ஈஶம்ʼ  -  ஈசரை

नतः अहम्  -  நத꞉: அஹம்  -  நான் வணங்குகிறேன்.

பொருள் :

உருவமற்றவரும், ஓங்கார த்வனியின் ஆதாரமானவரும்; ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளைக் கடந்த நான்காம் நிலையானவரும், வாக்கு, புத்தி, இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டவரும், மலைகளுக்கு அதிபதியானவரும், ( அதர்மத்தைக் கண்டு ) கடுமையாக நடந்துகொள்பவரும், காலனுக்கும் காலனானவரும், கருணை நிறந்தவரும், அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமான, ஸம்ஸாரமாகிற சுழலைத் தாண்டி இருப்பவருமான ஈசரை நான் வணங்குகிறேன்.   2

Meaning :

2.1: (Salutations to Sri Rudra) Who is Formless and the very Root from where the Sacred Omkara arises; Who Abides in the state of Turiya (the fourth state in which Brahman is experienced in meditation)

2.2: He is the Lord Who is Beyond the Knowledge which Speechcan express and Beyond the Perception which Sense Organs can perceive; He is Girisha (another name of Sri Shiva literally meaning the Lord of the Mountains)

2.3: Taking the Terrible form of Mahakala He can tear apart Kala (Time) himself; at the same time He is an embodiment of Compassion to His devotees,

2.4: I Bow down to Him Who helps in Crossing this Samsara(delusion of worldly existence) which is like a Dwelling Placemade of Gunas.

No comments:

Post a Comment