॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥
॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥
|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||
निजनेत्राम्बुजकृतपूजया परितोष्य यम् ।
श्रीपतिर्लभते चक्रं तं वन्दे सोमसुन्दरम् ॥ ६ ॥
நிஜநேத்ராம்பு³ஜக்ருʼதபூஜயா பரிதோஷ்ய யம் ।
ஶ்ரீபதிர்லப⁴தே சக்ரம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 6 ॥
nijanetrāmbujakṛtapūjayā paritoṣya yam ।
śrīpatirlabhate cakraṃ taṃ vande somasundaram ॥ 6 ॥
निज-नेत्र-अम्बुज-कृत-पूजया - நிஜ-நேத்ர-அம்பு³ஜ-க்ருʼத-பூஜயா - தன்னுடையதான தாமரைக் கண்ணைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்,
यं परितोष्य - யம்ʼ பரிதோஷ்ய - யாரை மகிழ்வித்து,
श्रीपतिः - ஶ்ரீபதி꞉ - ஶ்ரீபதியாகிய பெருமாள்,
लभते चक्रं - லப⁴தே சக்ரம்ʼ - சக்கரத்தைப் பெற்றாரோ,
तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
தன்னுடையதான தாமரைக் கண்ணைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால், யாரை மகிழ்வித்து, ஶ்ரீபதியாகிய பெருமாள் சக்கரத்தைப் பெற்றாரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 6
Meaning:
I adore that Somasundarar, after whom delighting with a Pooja with his eye (as a flower), Perumal gets chakram. 6
# பெருமாளுக்கு புண்டரீகாக்ஷன், பத்மாக்ஷன் என்றெல்லாம் பெயருண்டு. தாமரையிதழைப் போன்ற கண்களையுடையவர் என்று பொருள். இயல்பாகவே அப்படிப்பட்ட கண்களை உடையவர் என்றும் கொள்ளலாம்.
* நிஜ நேத்ர அம்புஜ க்ருத பூஜயா - தன்னுடைய/ விசேஷமான கண்ணாகிய தாமரையைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்.
* நிஜ நேத்ராம்பு-ஜ க்ருத பூஜயா - தன்னுடைய ஆனந்தக் கண்ணீரைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்.
பெருமாள் சக்கரம் பெற்ற சரித்திரம் :
திருமால் ஈசனிடம் சுதர்ஸன சக்கரம் பெற்ற வரலாறு சிவமஹாபுராணத்திலும் காணக்கிடைக்கிறது.
காஞ்சி புராணம் - திருமாற்பேற்றுப் படலம் (ஶ்ரீ சிவஞான சுவாமிகள் அருளியது) கூற்றுப்படி,
குபன் என்ற அரசன் ஒரு திருமால் பக்தன். அவனுக்கும் ததீசி முனிவருக்குமிடையே ஒரு முறை பகை ஏற்பட்டது. குபன், திருமாலிடம் முறையிட்டான். திருமால் ததீசி முனிவர் மீது தன் சக்கராயுதத்தை ஏவினார். முனிவரது வஜ்ர உடலை தாக்க முடியாமல் சக்கராயுதம் கூர் மழுங்கியது. அதனால் இத்தலத்தை அடைந்த திருமால், சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி, ருத்ராட்சம் அணிந்து சக்கரம் பெற வேண்டி, முறைப்படி ஈசனை பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு ஆயிரம் நாமங்கள் சொல்லி அர்ச்சித்து வந்தார். ஒரு நாள், பூஜையின்போது ஈசனின் திருவிளையாடலால், ஒரு மலர் குறைந்தது. வழிபாட்டில் குறையேற்படலாகாது என்று எண்ணி, தன் கண்ணை பறித்து கண்மலரால் ஈசனை வழிபாடு செய்தார், திருமால். இறைவன் உளம் மகிழ்ந்து பெருவடிவு தாங்கி, திருமாலுக்கு காட்சி கொடுத்தார்.
பெருமான் திருமாலை பார்த்து பார்த்து, ‘‘நாராயணரே! தாமரை மலருக்காக உன் கண்ணை எடுத்து, அர்ச்சித்தமையால், உனக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி, நீ தாமரைக் கண்ணன். 'பதுமாக்கன்' என்று நீ பேறு பெற்றதால், இத்தலம் ‘திருமாற்பேறு’ என்று உன் திருப்பெயரால் விளங்கப்பெறும்’’ என்று அருள் செய்து ‘‘சுதர்ஸனம்’’ என்னும் பெயர் கொண்ட சக்கரப்படையை வழங்கினார். நெடுமால் மிக்க மகிழ்ந்து சிவனாரை மும்முறை வலம் வந்து வணங்கினார். ‘‘என் போன்று ஆயிரம் திருநாமங்கள் கூறி மலர்களால் வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் அருள வேண்டும்’’ என ஈசனை வேண்ட, அவ்வாறே வரம் அளித்தார்.
திருமால்பூர் அருள்மிகு மணிகண்டீச்வரர் கோயில் வேலூரில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் பக்தர்களுக்கு சடாரி சார்த்தி, தீர்த்தம் தருவது தனி சிறப்பு.
இத்தலத்தை வழிபடுவோருக்கு உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு.
No comments:
Post a Comment